வெள்ளி, 5 டிசம்பர், 2014

நிரஞ்சன் எழுத்துக்கள் 1: பெரும்பான்மையினன்


"தினம் தினம் இந்த சமூக சூழல் என்னை பாடாய் படுத்துவதால் நான் தினம் தினம் அழுகிறேன்

நான் சந்தோசப்படுகிறேன், அழுவதால் எனக்கு சொரணை இருக்கிறது என்பதை நினைத்து.

அப்போது வருந்துகிறேன், நான் தாயின் வயிற்றில் இருந்து ஜனனம் ஆனபோது கஷ்டம் தாங்காமல் அழுதேன். இன்றுவரையும் கஷ்டம் என்றால் அழுதுகொண்டு மட்டுமே இருக்கிறேன் என்பதை நினைத்து.

மீண்டும் சந்தோசப்படுகிறேன், பிறக்கும்போது எனக்கு கிடைத்த அழும் உரிமை இன்றும் என்னிடம் இருந்து பறிக்க படாமல் இருப்பதை நினைத்து"