பக்கங்கள்: 504
பசியை பற்றி தொடங்கிய புத்தகம் பசி குறையாமல் படிக்க வைத்தது.... அவர் பிறந்த ஊர் நான் பிறந்த ஊரான மன்னார்குடி க்கு அருகில் இருக்கும் அபிவிருதீஸ்வரம் (கொரடாச்சேரி பக்கத்தில் உள்ள கிராமம்) என்பதால் இந்நூலில் வரும் நிகழ்வுகளின் புவியியல் எனக்கு நெருக்கமானதாக இருந்தது.
ராஜூமுருகன் அவர் வாழ்க்கையில் சந்தித்த நபர்களை, நிகழ்வுகளை கொண்டு ஆழமான அனுபவங்களை எழுதி இருக்கிறார்...... இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் நம் அனுபவத்திலும் உண்டு.... நாம் உணராமல் நம்மில் பதிவாகி இருந்த அந்த நிகழ்வுகள், நபர்கள் வெளியில் வருவார்கள்.... இந்த புத்தகம் ராஜூமுருகன் நம்முடன் பேசிக்கொண்டு இருப்பதை போன்றது... பசி, தவிப்பு, சோகம், விரக்தி போன்ற விடயங்களை பகிர்ந்து நேர்மறையான எண்ணத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்குகிறது... அவசியம் படியுங்கள்.
இவன்
நிரஞ்சன்