செவ்வாய், 31 ஜனவரி, 2017

அனிரூத் வைரலாகும் வீடியோ

ஒரு ஆண் பெண் உடலுறவை படம் எடுத்து ரசிப்பது, கேலி செய்வது, memes போடுவதை விட கேவலமான செயல் வேறு ஒன்றும் இல்லை.... காமம் ஒரு மகத்துவமான விஷயம்.... கூத்து அல்ல.....
இது அனிரூத் இல்லை.... ஏன் trisha bathroom வீடியோ கூட trisha இல்லை...fake


இன்னும் சொல்வதென்றால் நித்யானந்தா ரஞ்சிதா வீடியோ கூட fake ஆக இருக்கலாம். ஏனெனில் அந்த வீடியோ காட்சி லாட்ஜ் ல் எடுத்தது போல் இருக்கும்.... நித்யானந்தா ஆஸ்ரமம் முழுக்க முழுக்க செம் மண்ணில் செய்தது.

வியாழன், 23 ஜூன், 2016

திரைத்துறையை பிடித்த தரித்திரியம் தணிக்கை வாரியம்

"த்ரிஷா இல்லைனா நயன்தாரா" திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஜீ.வீ. பிரகாஷ்குமார் எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும் என்று தன் சித்தப்பாவிடம் சொல்லுவார்.. அதற்கு அவர் சித்தப்பாவான VTV Ganesh "அதெல்லாம் டைனோசர் காலத்துலயே அழிஞ்சுவிட்டது" என்று  சொல்லுவார்... இதை எல்லாம் கேட்டுட்டு தமிழர்கள் சும்மா இருக்கோம்... இதை எல்லாம் தணிக்கை வாரியம் வெட்டி எடுக்க மாட்டானுங்க...  டைனோசர் காலத்துலயே அழிஞ்சு போயிட்டுன்னா! அப்போ "மதர் தெரசா", "வேலு நாச்சியா" ,"இந்திரா காந்தி", "கஸ்தூரிபாய் காந்தி", "சுதந்திர போராட்டத்துல உயிர் விட்ட வீர மங்கைகள்" இப்போ இருக்குற முதலமைச்சர் ஜெயலலிதா வரைக்கும் கன்னி தன்மை அற்றவர்கள் என்று சொல்றானா இயக்குனர்?.... இதை கேட்டுட்டு மாதர் சங்கம் எங்கடா போனுச்சு? சிம்புவோட "பீப் சாங்" மட்டும் போராட்டம் பண்ணாங்க?...ஒரு "chain snatching" காட்சி உள்ள படம் என்று "மெட்ரோ" படத்தை  கத்தரித்த  தணிக்கை வாரியம் இந்த படத்தை ஏன் விட்டாங்க? "trisha illaina nayanthara" மாதிரி அசிங்கமான படத்தை தடை செய்யாமல் "உட்தா பஞ்சாப்" மாதிரி அழுத்தமான படங்களை மட்டும்  தடை செய்வது ஏன்? சமூகத்தை சீர்குலைக்கும் படங்களை மட்டும் அனுமதிக்கும். ஆனால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் படங்களை அனுமதிக்காது...


1918 இல் ஆங்கிலேயன் நம் நாட்டில் தணிக்கை வாரியத்தை உருவாக்கியதே.... சினிமாவை கட்டுப்படுத்த தான்...சினிமா என்னும் பலமான ஆயுதம் கூர்மையான கருத்துக்களை வெளிப்படுத்த கூடாது என்பது தான் அதன் நோக்கம்.. 1958 வரை தணிக்கை வாரியம் நம் காவல் துறையின் கையில் தான் இருந்தது... இதை விட கொடுமை வேறெதுவும் உண்டா? காவல் துறையிடம் ஒரு பெண்ணை கொடுத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவாள்... ஒரு சிறுவனை கொடுத்தால் நிரந்தர குற்றவாளியாக மாற்றப்படுவான்... ஒரு வாலிபனோ நிரந்தர நிரந்தர நோயாளி ஆவான்... ஒரு கிழவனை கொடுத்தால் பிணம் ஆவான்... அப்படிப்பட்ட காவல் துறையிடம் கலையை கொடுத்தால் என்ன ஆகும்?? தணிக்கை உருவாக்கப்பட்டதே கலையை அழிக்க தான்... திரைத்துறையை பிடித்த தரித்திரியம் தணிக்கை வாரியம்.

இவன்
நிரஞ்சன்.

வியாழன், 28 மே, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 10: வெறி என்ற..



சை என்ற

ழகான ஒன்று ஏக்கம் என்ற

சிங்கமான ஒன்றாய் மாறாதது சந்தோசம் தான்.

னால் வெறி என்ற

பத்தான ஒன்றாய் மாறியது போல் ஓர் உள்ளுணர்வு...

இவன்
நிரஞ்சன் 

புதன், 20 மே, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 9: பட்டினி உடம்பில் உணவு


மூன்று வேளை நான் பட்டினியாக இருப்பது தெரியாமல் இரவு வேளை வந்ததும்  என் மீது அமர்ந்து பசியாறி கொண்டு இருக்கிறது கொசு..

எனக்கு உணவு இல்லை என்றாலும் என்னில் உணவு இல்லாமல் இல்லை...

இவன்
நிரஞ்சன் 

செவ்வாய், 19 மே, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 8: அப்படி என்ன பாடம்?..


அம்மா உணவகத்தில் 2 சப்பாத்தி வெறும் மூன்றே ரூபாய்... அதை கூட வாங்க முடியாத சூழ்நிலை வந்து விடுதோ!!...

வாழ்கை பாடம் கற்பிப்பதாக சொல்ல படுகிறது... பாடையில் ஏற்றி அப்படி என்ன பாடம்????

இவன்
நிரஞ்சன் 

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

தீய செயல்கள் ஒரு தொடர்ச்சி..

தீய செயல் செய்பவன் தீய செயலுக்கு ஆளானவன்..
-----
அடுத்தவன் வயிற்றில் அடிப்பவன் இன்னொருவனால் வயிற்றில் அடிக்க பட்டவன்...
-----
அடுத்தவனை கெடுப்பவன் இன்னொருவனால் கெடுக்க பட்டவன்...
-----


 ஒரு தவறுக்கு அதற்க்கு முன்பு நடந்த தவறு தான் காரணமாய் இருக்கும்...இது ஒரு தொடர்ச்சி.. இதை அரசாங்கம் என்ன செய்கிறது?... இந்த தொடர்ச்சியை தொடர விட்டுக்கொண்டே இருக்கிறது அரசாங்கம்.... தீய செயல் செய்தவனை தண்டிக்கும் சட்டம், அவன் தீய செயலுக்கு ஆளானவன் என்பதை கணக்கில் எடுத்துகொள்வதில்லை....மாறாக அந்த தீய செயலுக்கு பின்னணியை இருந்த தீய செயலை செய்த நபரையும் தண்டித்திருக்கும்.... இது அச்செயலை ஒழிக்கும் முயற்சியே அல்ல...அரசாங்கம் நாட்டில் நடக்கும் குற்றங்களை கண்டுகொள்ளவில்லை... போலீஸ் தூங்குகிறது...சட்டம் ஒரு இருட்டறை  என்றெல்லாம் சொல்வதை விட குற்றங்களுக்கு அவை தான் காரணமாகவே இருக்கிறது.

.இவன்
நிரஞ்சன்

சனி, 11 ஏப்ரல், 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 7: அப்பயனும்...!


முதலாளிக்கு உழைத்து போடுவதில் தொழிலாளி அடையும் ஒரே பயன், வேர்வை வழியே வெளியேற்றப்படும் கழிவு தான்... தற்போது குளிரூட்டப்பட்ட அறையில்(AC)  அப்பயனும் ஒழிந்தே போனது...

இவன்
நிரஞ்சன்