செவ்வாய், 11 டிசம்பர், 2012

பிரம்ம ஹத்தி தோஷம்


     பிரம்ம ஹத்தி தோஷம் என்பது பெரிதாகச் சொல்லப்படும். குறிப்பாக பிராமணர்களை துன்புறுத்துபவர்களுக்கு இந்த பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், உயிர் பறித்தல், மாற்றான் மனை கவர்தல், கர்ப்பிணிப் பெண்ணை புனர்தல், பண மோசடி செய்தல் போன்றவர்களுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்.

காமம் தொடர்பான விஷயங்கள்தான் பிரம்ம ஹத்தி தோஷத்தில் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது, பெண் ஒருவள் தானே விரும்பி காமத்திற்கு அழைத்து அதனை ஆண் மறுத்தாள் அவனுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்.

கோயிலுக்கு சொந்தமான நிலம், சொத்துக்களை கையகப்படுத்துதல், அரசு சொத்து, நிலத்தை தன்னுடைமை ஆக்கிக் கொள்பவர்களுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்.

தசாபுக்தி நன்றாக நடந்தால் அப்போது அவர்கள் தப்பித்துவிடலாம். ஆனால் எந்த நேரத்தில் அவர்களுக்கு தசா புக்தி பலவீனமடைகிறதோ அப்போது அவர்களை பிரம்ம ஹத்தி தாக்கும். அவ்வாறு இல்லாமல் போனாலும், அவர்களுடைய வம்சத்தையே பாதிக்கும்.

பிரம்ம ஹத்தி தோஷம் பிடிக்காத அளவிற்கு கொஞ்சம் ஒழுக்கமாக இருந்து கொள்வது நல்லது.

கன்றுக்கு பால் விடாமல் அனைத்து பாலையும் கறப்பவர்கள், உணவில் விஷம் வைத்து கொள்பவர்களையும், ஊர் குளத்தில் விஷம் கலப்பவர்கள் பிரம்ம ஹத்தி தோஷம் பிடிக்கும்.

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

கார்த்திகை நட்சத்திரம் தான் அக்னி நட்சத்திரம்


 'அக்கினி நட்சத்திரம்' என்பது கார்த்திகை நட்சத்திரத்தைக் குறிக்கும். அக்கினிக்கு உரிய நட்சத்திரமாக அது கருதப்படும். அதன்மூலம் முருகனுடனும் சம்பந்தத்தைப் பெற்றுவிடுகிறது. அதுமட்டுமல்லாது, கிரகங்களில் சூரியனின் நட்சத்திரமாகவும் அது விளங்குகிறது. 'பஞ்சாக்னி' என்று சொல்லப்படும் ஐவகை நெருப்புக்களில் சூரியனும் ஒன்று.
                    கார்த்திகை நட்சத்திரங்கள், ஆறு என்று கணக்கிடப்பட்டாலும், அந்த பிரதேசத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இருக்கின்றன.

                    அத்தனையுமே விண்ணியற்காலக் கணிதப்படி, புதியவை; இளமையானவை. அவற்றில் பல, நட்சத்திரமாக உருப்பெறும் நிலையில் உள்ள அக்கினி மையங்களாகும். சில கோடி டிகிரி உஷ்ணத்தைத் தன்னகத்தே கொண்டவை.

                    அண்டப்பெருவெளியிலேயே உஷ்ணம் மிக அதிகமாக விளங்கும்  பிரதேசமாக கார்த்திகை நட்சத்திரக்கூட்டமிருக்கும் இடம் விளங்குகிறது.

                    சோதிடத்தில் இருபத்தேழு நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொறு பகுதியும் 'கால்' அல்லது 'பாதம்' என்று பெயர் பெறும்.

                    இந்த இருபத்தேழு நட்சத்திரங்களும் பன்னிரண்டு ராசிகளிலே இருக்கின்றன. ஒரு ராசியில் இரண்டேகால் நட்சத்திரம் இருக்கும்.

                    27/12 = 2 1/4(2.25)
                    1 நட்சத்திரம் = 4 பாதம்/கால்
                    .'. 2 1/4 நட்சத்திரம் = 9 பாதம்/கால்
                    .'. 1 ராசி = 9 நட்சத்திர பாதம்

                    முதலாவது ராசியாகிய மேடம், 'அசுவினி, பரணி', ஆகிய இரு நட்சத்திரங்களை முழுமையாகவும், 'கார்த்திகை' நட்சத்திரத்தின் முதற் கால் பகுதியையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

                    அடுத்த ராசியாகிய இடபத்தில்(ரிஷபம்), கார்த்திகையின் எஞ்சிய மூன்று கால்கள், ரோகிணி முழுதுடன் மிருகசீரிடத்தின் முன் இரு கால்கள் இருக்கும். இப்படியாகவே சென்று, கடைசியில் மீன ராசியின் கடை நட்சத்திரமாகிய ரேவதி நட்சத்திரத்தின் கடைக் காலுடன் முடியும்.

                    மேலே உள்ள விபரத்தின்படி பார்த்தீர்களானால், கார்த்திகை நட்சத்திரத்தின் பகுதிகள், மேடத்தின் கடைசிப் பாதமாகவும், இடபத்தின் முதல் மூன்று பாதங்களாகவும் விளங்கும்.

                வரலாற்றுக்காலத்துக்கும் முற்பட்ட காலத்திலேயே கார்த்திகை நட்சத்திரங்களை மனித இனம் இனம்கண்டு வைத்திருந்தது. தமிழர்கள் சிவ வழிபாடு முருக வழிபாட்டுடன் கார்த்திகையை சம்பந்தப் படுத்தியிருந்தனர். வேதகால ஆரியர்கள் அறிந்திருந்தனர்.

                                       
                                                      கார்த்திகை மண்டலம்


கிரேக்கர்களின் கவிஞராகிய ஹோமர் தம்முடைய இலியாட் என்னும் காவியத்தில் கார்த்திகையைக் குறிப்பிடுகிறார். சீனர்களுடைய வானநூல்களிலும் இது இருக்கிறது.
                ஜப்பானியர்கள் இதை ஸ¤பாரு Subaru என்று அழைத்தனர்.
                ஈரானியர்கள் இதை ஸொராயா Soraya என்று குறிப்பிட்டனர்.
                அந்தக் கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். அவற்றில் Alcyon என்பதே முக்கியமானது.
                இந்த நட்சத்திரங்களை ஏழு சகோதரிகள் என்று கிரேக்கர்களும் மற்றவர்களும் கூறுவார்கள். நம் புராணங்களும் அவ்வாறுதான் கூறின. ஆனால் கார்த்திகைப் பெண்கள் அறுவர் என்றே கணக்கு இருக்கிறது.
                அந்த ஏழாவது பெண் எங்கே?
                ஒரு புராணத்தில் காணப்பட்ட செய்தி:
                கார்த்திகைப் பெண்களாகிய எழுவரும் சப்த ரிஷிகளுக்கு உரியவர்கள். ஆனால் எங்கோ ஏதோ தவறிவிட்டது. ஆகவே இவர்கள் விண்ணில் தனி நட்சத்திரக் கூட்டமாக இருக்கநேர்ந்தது. அவர்கள் தவம் செய்தனர். முருகனை அவர்கள் பால்கொடுத்து வளர்க்கும் பேற்றைப் பெற்றனர். 'அறுவர் பயந்த ஆறமர் செல்வ' என்று பரிபாடல் கூறும்.
                அந்த ஏழாவது பெண்ணாகிய அருந்ததி சப்தரிஷிகளில் ஒருவராகிய வசிஷ்டரின் அருகில் இருக்கும் பேறு பெற்றாள்.
                                        
                                                     சப்த ரிஷி மண்டலம்

     சப்த ரிஷி மண்டலத்தின் அமைப்பு நன்கு பரிச்சயமானது. அதில் நான்கு நட்சத்திரங்கள் ஒரு நீள்சதுரம்போல் தோன்றும். அதிலிருந்து வளைந்த வால் போல் மூன்று நட்சத்திரங்கள் வரிசையாக நீண்டு விளங்கும்.
    அந்த மூன்றில் நடுப்பட்ட நட்சத்திரம் வசிஷ்டர். அந்த நட்சத்திரத்துக்கு மிகமிக அருகில் சற்று மங்கிய நட்சத்திரம் இருக்கும். அதுதான் அருந்ததி. மேற்கண்ட படத்தில் வசிஷ்டருடன் சேர்ந்து காணப்படுவதால் இரண்டும் ஒன்றாக சற்று நீண்டு இருப்பதாகத் தோன்றும்
                               இன்னும் கொஞ்சம் கணிதம்:

                     தமிழில் உள்ள சௌரமான ஆண்டுக்கணக்கில் unequal months என்று சொல்லப்படும் 'அசம மாதங்கள்' இருக்கும். ஒரு ராசியை சூரியன் கடப்பதற்கு எவ்வளவு காலம் பிடிக்கிறதோ, அதுதான் அந்த மாதத்தின் கால அளவு. சித்திரை, வைகாசி, ஆவணி, ஆகியவை 31 நாட்கள் கொண்டவை. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்கள் 30 நாட்கள் கொண்டவை. ஆனி, ஆடி ஆகியவை 32 நாட்கள் கொண்டவை. மாசி 29 நாட்கள். இந்த மாதங்கள் அனைத்துமே கரெக்டாக அந்தந்த நாட்களில் அலாரம் வைத்துக்கொண்டு மணியடித்துப் பிறப்பதில்லை.
                    சூரியன் எந்த நேரத்தில் புதிய ராசிக்குச்செல்கிறதோ, அந்த நேரத்தில்தான் அந்த மாதம் பிறக்கும். இரவு பகல் என்பதில்லை. 30 நாட்கள் என்றால் கரெக்டாக முப்பது நாட்கள் இராது.  30 plus/minus ஆகவும் இருக்கலாம்.

                    இந்தக ்கணக்கின் படி பார்த்தால், கார்த்திகை நட்சத்திரத்தின் ஒரு பாதத்தின் சராஇசரி கால அளவு 31/9 = 3 நாட்கள் 6 மணி நேரம் சொச்சமாகும்.

                    சித்திரை மாதத்திற்குரிய மேஷ ராசியின் கடைசிப்பாதமும் வைகாசி மாதத்திற்குரிய ரிஷப ராசியின் முதல் மூன்று பாதங்களும் கார்த்திகை நட்சத்திரத்துக்கு உரியவை. ஆகவே சித்திரை மாதத்தின் கடைசி மூன்றுஞ் சில்லறை நாட்களும், வைகாசி மாதத்தின் ஆரம்பப் பத்து நாட்களும் கார்த்திகை நட்சத்திரத்தைச் சூரியன் கடந்து செல்லும் காலகட்டமாகும். இந்த காலகட்டத்தைத் தவறுதலாக 'பின்னேழு-முன்னேழு' என்று சொல்வார்கள். அதாவது சித்திரையின் பின்னேழுநாட்கள்; வைகாசியின்
முன்னேழு நாட்கள்.
                    ஆனால் உண்மையிலேயே அக்கினி ந்ட்சத்திர நாட்கள் என்பவை சித்திரையின் கடை நான்குடன் வைகாசியின் முற்பத்து நாட்களும் கொண்ட இரண்டு வார காலம்.
                    இந்த காலகட்டத்தைத்தான் 'அக்கினி நட்சத்திரம்' என்று சொல்கிறோம். இக்காலத்தில் இந்த காலகட்டமே கோடையின் உச்சகட்ட வெய்யிற்காலமாகக் கருதப்படுகிறது.

                    சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கோடையின் உச்சகட்டம், இன்னும் சற்றுப்பின்னால் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. பண்டைய எகிப்தியர்களின் கணிப்புப்படி 'Canis Major' என்று அழைக்கப்படும்  நட்சத்திரக்கூட்டத்தில் சூரியன் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தபோது, கோடையின் உச்சகட்டம் ஏற்பட்டது. Canis Major, Canis Minor ஆகியவற்றில் உள்ள 'Canis' என்னும் சொல் நாயைக் குறிப்பதாகும். Canis Majorஇல் உள்ள முக்கிய நட்சத்திரம் Sirius எனப்படும் நட்சத்திரம். இதனை 'Dog Star' என்று அழைப்பார்கள்.

                                               
                                                                 பிரஜாபதி மண்டலம்


                    பிரஜாபதி மண்டலம் என்னும் நட்சத்திரக்கூட்டத்தில் மிருகசீரிஷம் திருவாதிரை ஆகியவை இருக்கின்றன. பிரஜாபதியை மேற்கத்தியார் Orion the Hunter என்று குறிப்பிடுவார்கள். நம் புராணங்கள் பிரஜாபதியை சிவனாகக் கருதும். மான் வேட்டை யாடுவதாக ஐதீகம். மிருகசீரிஷம் என்றாலே மானின் தலைதான்.. வேட்டைக் காரனுடன் இரண்டு நாய்கள் இருக்கும்.  பெரிய நாய் சிறிய நாய் ஆகியவை. அவற்றை Canis Major, Canis Minor என்று குறிப்பிடுவார்கள். அவற்றில் . பெரிய நாயாகிய கானிஸ் மேஜரின் மார்பில் அமைந்துள்ள மிகப் பிரகாசமான நட்சத்திரம்தான் ஸிரியஸ் - Alpha Canis Majoris.
                    பிரஜாபதி மண்டலத்திற்குத் தெற்கில் இந்த நட்சத்திர மண்டலம் விளங்கும்.
                    பிரஜாபதி மண்டலத்திலும் மிக உஷ்ணமண்டலம் ஒன்று உள்ளது. Belt of Orion என்னும் இடத்தில் அது விளங்கும். சிரியஸ் அந்த வட்டாரத்தில்தான் இருக்கிறது.

                    சிரியஸ் இருக்கும் இடத்திற்கு அருகில் சூரியன் சஞ்சரிக்கும்போது, சிரியஸ் தன்னுடைய உஷ்ணத்தையும் அத்துடன் சேர்த்து வெளிடுவதாக நம்பினார்கள். ஆகையால்தான் கோடைக்காலம் அவ்வளவு வெப்பமாக இருப்பதாகவும் நம்பினார்கள்.

                    சிரியஸ்தான் விண்ணிலேயே இரண்டாவது அதிக ஒளி கொண்ட நட்சத்திரம்.
                    அப்படியானால் முதலாவது?
 
                    பண்டைய காலத்தில் ஆடி மாத ஆரம்பத்தில் சூரியன் அந்த நட்சத்திர மண்டலத்தில் பிரவேசித்துச் செல்வதுண்டு. அதுதான் அப்போது கோடையின் மத்திம கட்டமாக இருந்தது. கி.மு. 3000 - அதாவது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அப்படியிருந்தது என்று சொல்லலாம். அவ்வமயத்தில்  சூரியன் உதிக்கும்போது சமகாலத்தில் சிரியஸ் கீழ்வானத்தில் தோன்றும். அதே நேரத்தில் எதியோப்பியாவின் மலைப்பிரதேசங்களில் பெருமழை பெய்யும். அம்மழை நீர் பெருக்கெடுத்துக் கீழே இறங்கி வெள்ளை  நைல் ஆற்றின்வழி ஓடிவரும். இவ்வாறு நைல் நதியில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்போது சிறப்பு விழாக்கொண்டாடி வழிபாடு நடத்துவார்கள். நீர் வளம்  மட்டுமின்றி நிலவளத்தையும் வண்டல் மண் மூலம் அந்த நீர்ப்பெருக்கு ஏற்படுத்தியது. இதெல்லாம் இப்போது ஏற்படுவதில்லை. அஸ்வான் அணை தடுத்துவிட்டது. பண்டைய எகிப்தியர்கள், நைல் நதியை 'Sirius' என்று அந்த நட்சத்திரத்தின் பெயரால் அழைத்தார்கள்.

                    Sirius என்னும் நட்சத்திரம், எகிப்தியரின் முக்கிய தேவர்களில் ஒருவரான Anubisஸ¤க்கு உரியது.
                    நாய்த்தலையுடன் காணப்படும் அந்த தேவன், காட்டுநாய் அல்லது நரித்தலையுடனும் காட்சியளித்தார். முழுமையான நாயுருவத்துடனும் காணப்படுவதுண்டு. இறந்தவர்களைகீழ் உலகத்திற்கு இட்டுச்செல்லும் ஆவி உலகத்துத் தேவனாகவும் பாவபுண்ணியங்களைக் கணக்கிடுபவராகவும் இருந்தார்.
                    இந்த தேவனை 'Return of the Mummy' படத்தில் காணலாம்.
                    அந்த மாதிரி கடுங்கோடை நாட்களை அவர்கள் 'Dog Days' என்று அழைத்தார்கள்.
                    இப்போதும்கூட Dog Days என்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் வேறு அர்த்தத்தில். சிரமநிலையில் இருக்கும் காலத்தை Dog Days என்று சொல்கிறார்கள்.

                     ஆரம்பகாலத்தில் அக்கினி நட்சத்திரம்தான் Dog Days ஆக இருந்தது. ஆனால் அந்த அக்கினி நட்சத்திரம் கார்த்திகை அல்ல; சிரியஸ்.


செவ்வாய், 4 டிசம்பர், 2012

கேரி பேக்கு’களும் அணுகுண்டுகளும் !!!


 

இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் ‘கேரிபேக்’ மாறிவிட்டது, இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப் படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம், பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்றுமண்டலம் மாசுபடுகிறது, பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்யமுடியாது. இதனால் இவை நீர்நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் ‘நெட்வொர்க்கையும்’ பாதிக்கிறது, இந்த வகையில் ‘கேரிபேக்’ எனும் பாலிதீன் பைகளும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்புகளும் இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு ‘கேரிபேக்’ மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானம் சொல்கிறது. மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது.

ஹோட்டல்களில் ‘கேரிபேக்’கில் சுடச்சுட உணவுகளை பார்சல் செய்து கொடுக்கின்றனர். சாம்பார் போன்றவைகளையும் சிறிய பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலிதீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப்பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு பாலிதீன் பைகள் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. அவைகள் மண்ணில் மக்காமல் அப்படியே இருப்பதால் பூமியின் தன்மையே மாறுபடுகிறது. மழை நீரை உறிஞ்சும் சக்தியை மண் இழக்கிறது. இன்னும் ஒரு முக்கியப் பிரச்சனை, எத்தனை மாடுகள் பாலிதீன் பைகளை தின்று தீர்க்கின்றன தெரியுமா? சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாட்டின் வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அதில் இருந்து 40 கிலோ பாலிதீன் பைகள் எடுத்து வெளியில் கொட்டப்பட்டன.


கடைக்கோ அல்லது வெளியில் எங்கும் செல்லும்போது நிச்சயமாக ஒரு கைப்பையை எடுத்துச் செல்லுங்கள். எந்தப் பொருள் வாங்கினாலும் பாலிதீன் பையில் வாங்குவதைத் தவிர்ப்போம் 

மலைபோலக் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள், அணுகுண்டை விட ஆபத்தானது. அடுத்த தலைமுறையினருக்கு பேராபத்து.

 துணிப்பைகள், சணல் பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்போம். பாலித்தீன் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.