அஸ்வினி முத்திரை என்றால் என்ன என்று பலருக்கு இங்கு தெரியாது. அஸ்வினி என்றால் குதிரை என்று அர்த்தம்.
நீங்கள் குதிரையின் பின்புறத்தை(மலம் கழிக்கும் இடத்தை) பார்த்தீர்கள் என்றால் அது சுருங்கும்... விரியும்.... சுருங்கும் .....விரியும்..... அதை தான் நாம் அஸ்வினி முத்திரை என்று கூறுகிறோம்.
குதிரையை பார்த்தீர்களா, அது எவ்வளவு வலுவாக உள்ளதென்று. அதற்கு காரணம் இரண்டு ஒன்று அதன் உணவான கொள்ளு. இன்னொன்று அஸ்வினி முத்திரை ஆகும்.
அதனால் தான் அது மிக ஆற்றலாக உள்ளது.
மனிதர்களாகிய நாமும் இதை செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம். இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். இளமை நம்மிடமே தங்கும். ஆண்மையை பெருக்க வழி என்ன என்று புலம்புபவர்களுக்கு இதை விட சிறந்த வழி வேறு இல்லை. சித்தர்கள் சொன்னதல்லவா .
காரணம் என்னவென்றால், உடலில் உள்ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசன வாயில்(சுருங்கும் இடத்தில) வந்து குவிகின்றன. அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட்டு உடல் சக்தி பெறுகிறது.

இவை எல்லாம் நாமே தீர்த்து கொள்ளவேண்டிய ஒன்று, தேவை இல்லாமல் மருத்துவர்களை நம்பி ஏமாறவேண்டாம்.
அத்தனை நோய்களையும் சுயமாகவே தீர்த்து கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் ரத்தம் நாம் இன்று ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்த மருத்துவத்தை படிக்க விரும்புகிறோம், அதை நாடி செல்கிறோம் என்றால் வெட்க்க படவேண்டும்.
இதை மறுபடியும் நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து மக்களுக்கு அறிமுக படுத்தியவர் வேதாத்ரி மகரிஷி. மனவலக்கலை என்ற அமைப்பு காயகர்ப்பம் என்ற பெயரில் இத்துடன் பல ஆசனங்கள் சேர்த்து சில முறைகளை கைகொண்டு வழங்கிவருகின்றது. காயம் என்றால் உடம்பு கர்ப்பம் என்றால் உறுதி என்ற பொருள்.