ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

விஷமாகி போனதே!

 

இந்நாட்டில் உணவும், மருந்தும் விஷம் ஆகிவிட்டது... 
விஷமே உணவாகவும் மருந்தாகவும் இருக்கிறது.
பிறகு எப்படி இருக்கும் ஆரோக்கியம்..
வெள்ளையன் இதை விஷமாக்கி விட்டான்.  
முதலாளித்துவம் இதை விஷமாக்கி விட்டது. 
நம் அரசாங்கம் இதற்க்கு துணை  போகி விட்டது..

இவன்
நிரஞ்சன் 

சனி, 12 ஏப்ரல், 2014

தேர்தலும் தேர்வும் ஒரே நேரத்தில் வருவது சரியா?


தேர்தல் நேரத்தில் தேர்வு வைத்தால் மாணவர்கள் எப்படி தேர்தல் நிலையை உணர்வார்கள்?

எப்படி நல்ல அரசை அவர்களால் தீர்மானிக்க முடியும்?

தேர்வுக்கு படிக்காவிட்டாலும் தேர்வு பீதியில் இருப்பார்கள்.(இந்த நாட்டில் கல்வி என்பது பீதி அடையும் விஷயமாக தானே இருக்கிறது!!) அந்த பீதியில் இருக்கும்போது எப்படி அரசியலை சிந்திப்பார்கள்?....எப்படி நல்ல தலைமையை தீர்மானிப்பார்கள்?

அப்படி சிந்திக்க கூடாது என்பதற்காக தானே இப்படி தேர்வும் தேர்தலும் ஒரே நேரத்தில் வருகிறது... இந்த நாட்டில் தீவிர சிந்தனைக்கு பிறகா அரசியல் தீர்மானிக்க படுகிறது.....கோமாளி தனங்கள் விளம்பரம் ஆகி தானே ஆட்சி தீர்மானிக்க படுகிறது...... தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு விடுமுறை விடுவதனால் ஓட்டுரிமை உள்ள மாணவர்களால்  யார் ஆட்சிக்கு வரவேண்டும்  என்று முடிவெடுத்து விட முடியாது....

இப்படி நிலை இந்திய நாட்டில் இருப்பதனால் தான் பெரும்பகுதி மாணவர்கள் ( 97%) அரசியல் ஞானமே இல்லாமல் நாறிப்போய் இருக்கிறார்கள்...இப்படி மாணவர்களை வைத்து கொண்டு இந்தியா வல்லரசு ஆவது இளைஞர்கள் கையில் என்று சொன்னால் பற்றிக்கொண்டு வருகிறது.

 இவன்
நிரஞ்சன்