ஞாயிறு, 26 அக்டோபர், 2014

புலி வீடியோ : ஒரு சாவு சுவாரஷ்யம் ஆகி போன கதை:

ஒரு மனிதனுடைய மரணத்தை சுவாரஷ்யமாக பேசிகொண்ட ஊர் எதுவென்று கேட்டால் அது நம் ஊர் தான்.

டெல்லியில் அந்த சம்பவம் நடந்த நாள் முதல் நேற்று வரை, அந்த கொடூரமான வீடியோ காட்சியை ஒவ்வொருவனும் தங்கள் மொபைல் போனில்  ஏற்றி வைத்து கொண்டு சுவாரஷ்யமாக பேசி, விமர்சித்து, மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....

"இவன் ஓடி வரவேண்டிய தானே ஏன் அங்கேயே உட்காந்து இருக்கான்" என்கிறான் ஒருவன்,

"நானாக இருந்தால் அந்த புலியை அடிச்சு போட்டுட்டு வந்திருப்பேன்"
என்கிறான் ஒரு பய..

"இவன யாரு திமிரு எடுத்து போயி அங்க போக சொன்னது" என்கிறான் ஒருத்தன்" (ஏன்பா மனுஷனா பிறந்தவன் தப்பு செய்ய மாட்டானா? நீங்க தவறே செய்யாத ஆளா? ஒருத்தன் செத்த பிறகு இப்படியாடா பேசுவீங்க?)

இன்னொரு  பய சொல்றான் " அவன் புலியோட சேர்ந்து நின்னு selfie எடுக்க போயிருப்பான்" (இவனை எல்லாம் செருப்பால அடிக்க வேண்டாம்???)

ஒருத்தன் சொல்றான் "அந்த வீடியோ வை என்னோட மொபைலுக்கு அனுப்புங்க... என்னோட பொண்ணுக்கிட்ட இதை காட்டுனா ஜாலியா என்ஜாய் பண்ணுவா"

நேற்று ஒருத்தன் பேஸ்புக்கில் " கத்தி படத்தில் விஜய் அந்த புலியை அடக்குராறு, பூஜை படத்தில் விஷால் TATA SUMO வில் துரத்துராரு" அப்படீன்னு எழுதுறான்...

ஒருவனுடைய கொடூரமான சாவை இப்படி நகைச்சுவையாக கேலி செய்து விளையாடும் அரக்கர்களாக நம் மக்கள் கூட்டம் மாறி வருகிறதே.... ஐயோ ஆண்டவா... இதுக்கு புலி வீடியோன்னு ஒரு பேரு வேற வட்சிருகானுங்க...

இவன்
நிரஞ்சன்

1 கருத்து: