திங்கள், 26 ஜனவரி, 2015

குடியரசு தின வாழ்த்துக்கள் 2015

என் குடியை கெடுக்கிறது
குடி அமர்த்தப்பட்ட அரசின் துணையுடன் குடி பெயர்ந்த அரசு.

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

இவன்
நிரஞ்சன் 

வியாழன், 22 ஜனவரி, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 4: செக்யூரிட்டி கிழவன்


வயதான எனக்கு செக்யூரிட்டி வேலை மட்டுமே கிடைப்பதால், 
இளைய சமுதாயத்தையே கொன்று குவித்திட நினைக்கிறேன். என் மகன் உட்பட......

இவன்
நிரஞ்சன்

புதன், 14 ஜனவரி, 2015

கொண்டாடப்பட வேண்டிய பண்டிகை போகி தான், பொங்கல் அல்ல


உழவும் உழவனும் அழிந்து வரும் நிலையில் உழவர் தின கொண்டாட்டத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறோம்.... சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அர்த்தமே கிடையாது... அப்படி தான் உழவர் தின கொண்டாட்டமும் மாறி கொண்டிருக்கிறது... கொண்டாடப் பட வேண்டிய தினம் போகி தான்.. அநியாயம் அரங்கேற்றும் அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும், விங்ஞானிகளையும் எரித்து...
இவன்
நிரஞ்சன்

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 3: சாது மிரள வேண்டும்


தேவைகள் பூர்த்தி ஆகாத நிலையில் எத்தகைய சாதுவும் மிரள்கிறது. சாதுக்கள் மிரள வேண்டிய இடம் பார்த்து மிரண்டால் பிறந்திடும் புரட்சி.

இவன்
நிரஞ்சன் 

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 2: ஒழுங்கற்ற அரசியலின் விளைவு

"சோற்றுக்கு வழி இல்லை. என் கணவனின் காம உணர்வை தூண்டுகிறேன், இருவரும் பசி மறப்பதற்காக. இதன் விளைவாக ஒரு குழந்தை பிறந்தால் அதன் பசிக்கு என்ன செய்வேன்? என் பணக்கார தந்தை சொன்னார், இதற்க்கு காரணம் நீ அவனை காதலித்து திருமணம் செய்தது தான் என்று. எனக்கு என்னவோ என் கணவர் அடிக்கடி சொல்வது போல் இது ஒரு ஒழுங்கற்ற அரசியலின் விளைவு என்றே படுகிறது"
இவன்
நிரஞ்சன்