சனி, 21 பிப்ரவரி, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 5: பணம் பாவம்


பணம் என்ற ஒன்றை கண்டுபிடித்த பாவத்துகாகவே
மனிதன் பணத்துக்காய் கஷ்ட பட்டுக்கொண்டு தான்
இருப்பான்.... மனிதன் செய்த மிக பெரிய பாவம்.... பணம்

இவன்
நிரஞ்சன் 

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

ஏக்க பதிவுகள்:


phoenix market city, EA, city centre போன்ற மிக பெரிய மால்கள் மழையில் நனைந்ததை விட ஏக்கத்தில் நனைந்ததே அதிகம். வெயில் காய்ந்ததை விட ஏக்கத்தில் காய்ந்ததே அதிகம். அங்கே முழுக்க முழுக்க ஏக்க பதிவுகள்... சாமானியனின் ஏக்கம் பதிந்த இடங்கள் அவை..அங்கே ஜன்னல் வாடிக்கையாளனின் ஏக்கம் மட்டும் பதியவில்லை... ஜன்னலுக்கு உள்ளிருப்பவனின் ஏக்கமும் பதிந்திருக்கிறது ...  மழையும் வெயிலும் அதன் கட்டிடத்தில் விரிசல் ஏற்படுத்தலாம். ஆனால் இந்த ஏக்கம் சமூக அமைதியில் விரிசல் ஏற்படுத்த கூடியது.. சமூக அமைதியை கெடுக்கும் ஏக்கம் தேவை இல்லை... அரசியல் அமைதியை கெடுக்கும் கோபம் தேவை.....

இவன்
நிரஞ்சன்