"த்ரிஷா இல்லைனா நயன்தாரா" திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஜீ.வீ. பிரகாஷ்குமார் எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும் என்று தன் சித்தப்பாவிடம் சொல்லுவார்.. அதற்கு அவர் சித்தப்பாவான VTV Ganesh "அதெல்லாம் டைனோசர் காலத்துலயே அழிஞ்சுவிட்டது" என்று சொல்லுவார்... இதை எல்லாம் கேட்டுட்டு தமிழர்கள் சும்மா இருக்கோம்... இதை எல்லாம் தணிக்கை வாரியம் வெட்டி எடுக்க மாட்டானுங்க... டைனோசர் காலத்துலயே அழிஞ்சு போயிட்டுன்னா! அப்போ "மதர் தெரசா", "வேலு நாச்சியா" ,"இந்திரா காந்தி", "கஸ்தூரிபாய் காந்தி", "சுதந்திர போராட்டத்துல உயிர் விட்ட வீர மங்கைகள்" இப்போ இருக்குற முதலமைச்சர் ஜெயலலிதா வரைக்கும் கன்னி தன்மை அற்றவர்கள் என்று சொல்றானா இயக்குனர்?.... இதை கேட்டுட்டு மாதர் சங்கம் எங்கடா போனுச்சு? சிம்புவோட "பீப் சாங்" மட்டும் போராட்டம் பண்ணாங்க?...ஒரு "chain snatching" காட்சி உள்ள படம் என்று "மெட்ரோ" படத்தை கத்தரித்த தணிக்கை வாரியம் இந்த படத்தை ஏன் விட்டாங்க? "trisha illaina nayanthara" மாதிரி அசிங்கமான படத்தை தடை செய்யாமல் "உட்தா பஞ்சாப்" மாதிரி அழுத்தமான படங்களை மட்டும் தடை செய்வது ஏன்? சமூகத்தை சீர்குலைக்கும் படங்களை மட்டும் அனுமதிக்கும். ஆனால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் படங்களை அனுமதிக்காது...இவன்
நிரஞ்சன்.
