வியாழன், 23 ஜூன், 2016

திரைத்துறையை பிடித்த தரித்திரியம் தணிக்கை வாரியம்

"த்ரிஷா இல்லைனா நயன்தாரா" திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஜீ.வீ. பிரகாஷ்குமார் எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும் என்று தன் சித்தப்பாவிடம் சொல்லுவார்.. அதற்கு அவர் சித்தப்பாவான VTV Ganesh "அதெல்லாம் டைனோசர் காலத்துலயே அழிஞ்சுவிட்டது" என்று  சொல்லுவார்... இதை எல்லாம் கேட்டுட்டு தமிழர்கள் சும்மா இருக்கோம்... இதை எல்லாம் தணிக்கை வாரியம் வெட்டி எடுக்க மாட்டானுங்க...  டைனோசர் காலத்துலயே அழிஞ்சு போயிட்டுன்னா! அப்போ "மதர் தெரசா", "வேலு நாச்சியா" ,"இந்திரா காந்தி", "கஸ்தூரிபாய் காந்தி", "சுதந்திர போராட்டத்துல உயிர் விட்ட வீர மங்கைகள்" இப்போ இருக்குற முதலமைச்சர் ஜெயலலிதா வரைக்கும் கன்னி தன்மை அற்றவர்கள் என்று சொல்றானா இயக்குனர்?.... இதை கேட்டுட்டு மாதர் சங்கம் எங்கடா போனுச்சு? சிம்புவோட "பீப் சாங்" மட்டும் போராட்டம் பண்ணாங்க?...ஒரு "chain snatching" காட்சி உள்ள படம் என்று "மெட்ரோ" படத்தை  கத்தரித்த  தணிக்கை வாரியம் இந்த படத்தை ஏன் விட்டாங்க? "trisha illaina nayanthara" மாதிரி அசிங்கமான படத்தை தடை செய்யாமல் "உட்தா பஞ்சாப்" மாதிரி அழுத்தமான படங்களை மட்டும்  தடை செய்வது ஏன்? சமூகத்தை சீர்குலைக்கும் படங்களை மட்டும் அனுமதிக்கும். ஆனால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் படங்களை அனுமதிக்காது...


1918 இல் ஆங்கிலேயன் நம் நாட்டில் தணிக்கை வாரியத்தை உருவாக்கியதே.... சினிமாவை கட்டுப்படுத்த தான்...சினிமா என்னும் பலமான ஆயுதம் கூர்மையான கருத்துக்களை வெளிப்படுத்த கூடாது என்பது தான் அதன் நோக்கம்.. 1958 வரை தணிக்கை வாரியம் நம் காவல் துறையின் கையில் தான் இருந்தது... இதை விட கொடுமை வேறெதுவும் உண்டா? காவல் துறையிடம் ஒரு பெண்ணை கொடுத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவாள்... ஒரு சிறுவனை கொடுத்தால் நிரந்தர குற்றவாளியாக மாற்றப்படுவான்... ஒரு வாலிபனோ நிரந்தர நிரந்தர நோயாளி ஆவான்... ஒரு கிழவனை கொடுத்தால் பிணம் ஆவான்... அப்படிப்பட்ட காவல் துறையிடம் கலையை கொடுத்தால் என்ன ஆகும்?? தணிக்கை உருவாக்கப்பட்டதே கலையை அழிக்க தான்... திரைத்துறையை பிடித்த தரித்திரியம் தணிக்கை வாரியம்.

இவன்
நிரஞ்சன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக