இந்தியன் ஆவது எப்படி?
"Becoming Indian: The Unfinished Revolution of Culture and Identity"
எழுதியவர்: பவன் கே.வர்மா
தமிழில்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
இப்புத்தகத்தை இந்தியனாக அல்ல தமிழனாக படித்தேன்.... இப்புத்தகத்தை குஜராத்தியாகவும் படிக்கலாம், மராத்தியனாகவும் படிக்கலாம், தெலுங்கனாகவும் படிக்கலாம். எல்லா இனத்திற்கும் இப்புத்தகத்தின் கரு பொருந்தும்... நான் தமிழனாக படித்தேன்.

சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்பட்டாலும் அது விழாவாக கொண்டாடப்பட்டாலும் நாம் இன்னும் ஆண்டவர்களால் ஆளப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதை தோலுரித்துச் சொல்லுவதே இந்த புத்தகம்.... அரசியல் ரீதியில் இல்லாமல் கலாச்சார ரீதியில் நாம் இழந்தது என்ன? என்பதை இப்புத்தகம் விவரிக்கிறது..காலனியம் தான் முடிவுக்கு வந்ததே தவிர அதன் பின் விளைவுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.... நமது அடையாளங்களை இழப்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை... நமது சுயம் நம்மை விட்டு போன பிறகு பகுத்தறிவு, அனைவரும் சமம் என்று சொல்வதெல்லாம் வெறும் பிதற்றல்... நாம் அடிமையே! என்பது தான் உண்மை.... நாம் நம் மொழியின் அவசியம், இயற்கை புரியாமல் நம் சுயத்தை இழந்து உலகமயமாக்கல் செய்யப்பட்ட இவ்வுலகில் உலகமயமாக்கலின் சூத்திரதாரிகளின் நகலாகவும் அவன் அடிமையாகவும் இருக்கிறோம்...
ஒரு வல்லரசாக அல்ல, குறைந்தபட்சம் சுதந்திரமான ஒரு நாடக தமிழகம் மாறவேண்டுமென்றால் நாம் முதலில் கலாச்சார ரீதியில் தமிழர்களாக மாறியாக வேண்டும்.
இவன்
நிரஞ்சன்