செவ்வாய், 16 அக்டோபர், 2012

மதம்

மதங்கள் அனைத்தும் நாம் உருவாக்கியதே 
             அணைத்து மதங்களுமே நல்ல கருத்துக்களை தான் சொல்லுகிறது .
மனிதர்களுக்கு  ஒழுங்குமுறைகளை  கற்றுகொடுப்பதே மதம். சண்டையிட்டுக்கொள்ள அல்ல. ஆனால் சண்டையிட்டுக்கொள்வது சகஜமே ஏனெனில் பிரிவினை இருந்தால் சண்டை வர தான் செய்யும்  இது எக்காலத்திலும் மாரிவிடபோவதில்லை . அது இயல்பு தான். நாங்கள் இந்த மதம் என்று அடித்துக்கொள்பவர்கள் , தன மதத்துக்குள்ளேயே  நாங்கள் இன்ன சாதி என்று அடித்து கொள்கிறார்கள் இல்லையா, எனவே இது மதச்சண்டையோ சாதிச்சண்டையோ இல்லை தன நிலையை பெருமை படுத்தவே எழும் சண்டை. அவ்வளவுதான்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் மதங்கள் அனைத்தும் நாம் உருவாக்கியதே. இது ஒரு சாதாரண விஷயம். இதில் பெருமை பீத்திக்கொல்வதர்க்கு ஒன்றும் இல்லை என்றே சொல்கிறேன். ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கிறிஸ்துவ மதம் வந்தது. அதற்க்கு முன்பே அரேபியர்கள் வந்தார்கள் இஸ்லாம் மதம் வந்தது அதற்க்கு முன்பே புத்த மதம், ஜெயின  மதம், சீக்கியர்கள், இருந்தார்கள் அதற்க்கு முன்பு இந்து மதம், மதம் என்று எல்லாம் இல்லாமல் இந்து சமவெளி நாகரீகத்தை (indus valley civillization) பின்பற்றுபவர்களாகவே இருந்தார்கள். மற்ற மதங்கள் வந்த பிறகு இந்து மதம் என்று கூறப்பட்டது .  இந்து சமவெளி நாகரீகத்தை பின் பற்றியதால் தான் இந்தியா என்றே பெயர் வந்தது. ஆரம்பத்தில் சைவம் வைணவம் என்ற பிரிவே இருந்தது. அதற்க்கு முன்பு வைணவம் இல்லை சைவம் மட்டுமே இருந்தது. அதற்க்கு முன்பு ஒரு மதமும் இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது நாம் மனிதர்கள் மட்டுமே. மதங்கள் என்பது நாம் உருவாக்கியதே.

-இவன் நிரஞ்சன்



செவ்வாய், 9 அக்டோபர், 2012

தானம் என்பது

 தானம்  பதினாறு வகைப்படும். அவை,

1. அன்னதானம்

2. பூமி

3. கன்னிகாதானம் (திருமணத்தின்போது செய்யும் கடமை)

4. பசு

5.ரிஷபம்

6. பொன்

7. வெள்ளி

8. ஆடை

9. படுக்கை

10. வாகனம்

11. தீபம்

12. எள்

13. தானியம்

14. வீடு

15.வித்தை

16.அபயம்.      ஆகியன ஆகும்

-இவன் நிரஞ்சன்

செவ்வாய், 2 அக்டோபர், 2012

பிளாஸ்டிக் பற்றிய ஒரு முக்கிய தகவல்

ந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கலாம்?
நீங்கள் வாங்குகிற எந்த ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது பாட்டிலின்  அடியிலும் முக்கோண வடிவமிட்டு ஓர் எண் இருக்கும். ஒன்று முதல் ஏழு வரை இருக்கும் இந்த எண்தான் அந்த பிளாஸ்டிக்கின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமரின் தரத்தைக் குறிக்கும். ஒரேவிதமான பிளாஸ்டிக்கையெல்லாம் ஒன்றாக உருக்கி, மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவதற்காக இந்த எண்ணைக் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த எண்ணை வைத்து எந்தவிதமான பிளாஸ்டிக்கை எதற்காக உபயோகப்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.



எண்: 1 PET
பொதுவாக ஒருமுறை உபயோகப்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.

எண்: 2 - HDPE (High density poly ethylene)
ஷாம்பூ டப்பாக்கள், சில கடினமான பிளாஸ்டிக் பைகள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.
எண்: 3 - PVC ( Poly vinyl chloride)
உணவு பேக் செய்யப்படும் பொருள், பைப்புகள், கிளீனிங் பவுடர்கள் இருக்கும் டப்பாக்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. டையாக்ஸின் போன்ற நச்சுவாயுக்களை வெளிப்படுத்துவதால் உடலுக்குப் பலவிதத் தீங்குகளை விளைவிக்கக் கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்கக்கூடாது.

எண்: 4 - LDPE (Low Density poly ethylene)
இந்த எண் உடைய பிளாஸ்டிக்குகள் குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்த ஏற்றது. மற்ற பிளாஸ்டிக் வகையில் நச்சு வாயுக்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டு.

எண்: 5 - Poly propylene
சூடான பொருட்களை வைக்கவும், பொதுவான உணவுப் பண்டங்களை வைக்கவும் பயன்படுத்தக் கூடியது. இந்த வகை பிளாஸ்டிக் பொருளை மைக்ரோ வேவிலும் உபயோகப்படுத்தலாம்.

எண்: 6 - Polystyrene
உணவுப் பொருட்கள் வைத்து சாப்பிடலாம். ஆனால், எடுத்துச்செல்ல ஏற்றதல்ல.


1 முதல் 4 எண் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் உணவு எடுத்துச்செல்லத் தகுதியானவை அல்ல. இவை வெப்பச்சூழல் மாறும்போது கார்சினோஜின் எனப்படும் வாயுவை வெளியிடுவதால், இது புற்றுநோய்க்குக் காரணமாக அமையும்.

5, 6 எண் கொண்டவை உணவு, தண்ணீர் ஆகியவை வைக்கவோ, எடுத்துச்செல்லவோ தகுதியுடையவை.


எண்: 7 எண் கொண்ட பாலிகார்பனேட் பிளாஸ்டிக் வகைகளை உலக நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவை இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.