பலர் தோல்வி அடைந்திருப்பார்கள்.
பலர் காதலை கூற தைரியமின்றி காதலை வெளிப்படுத்த முயற்சி மட்டும் செய்திருப்பார்கள்.
சிலர் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்களிடம் காதல் சொல்லிருப்பார்கள். பெண்களும் தான்.
பலர் காதல் தினத்தன்று தான் காதலை சொல்ல வேண்டுமா போங்கடா டேய்! என்று விலகி இருப்பார்கள்.
பலர் நண்பன் அல்லது தோழியின் காதலுக்கு உதவி செய்திருப்பார்கள்.
சிலர் தோல்வியால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்..
சிலர் தற்கொலை செய்து இறந்தும் போயிருக்கலாம்.
பலர் தற்கொலை செய்து கொள்வேன் என்று acting விட்டிருப்பார்கள்.
பலர் காதல் தோற்றதால் வருத்தம் இல்லாவிட்டாலும் வருத்தம் இருப்பது போல் சீன் காட்டுவார்கள்.
ரொம்ப பலர் சினிமா பார்த்துவிட்டு இந்த பொண்ணுங்களே இப்படி தான் மச்சி என்று நடிப்பார்கள் (ஹீரோ நு நினைப்பு) santhanam fans (loosu)
பலர் சரக்கடிக்க தொடங்கி இருப்பார்கள்...சரக்கு அடிக்கும்போதும் சினிமா டயலாக் பேசிக்கொண்டே நான் ஒரு சினிமா பைத்தியம் என்று நிருபித்துகொண்டெ இருப்பார்கள்.
சிலர் அம்மா அப்பா கிட்ட மாட்டிகொண்டு முழித்திருப்பர்கள்..
சில ஆண்கள் செருப்படி மிகவும் சில பெண்கள் அரச்சை வாங்கி இருப்பார்கள்.
காதலில் வெற்றி பெற்ற பலர் இன்னைக்கு ஏன் call பன்னல, ஏன் message பன்னல, ஏன் wish பன்னல, ஏன் வெளிய கொட்டிட்டு போகல, என்னோடு ஏன் time spent பன்னல, இப்படி பல மொக்க காரணங்களுக்காக சண்ட போட்டிருப்பார்கள்....
பலர் வெளிய சுத்தும்போது போலீஸ்காரனிடம் மாட்டிகொண்டு பணத்தை விரயம் செய்திருப்பார்கள்..
பலர் அடுத்தவர் காதலை கெடுத்திருப்பர்கள்...
சில காதலர்கள் சந்தோசமாக வெளிய சென்று வந்திருப்பார்கள். (இது கதிர்வேலன் காதல் படத்திற்கு போனவர்கள் தவிர)
ரொம்ப சிலர் இன்று காதலர் தினம் என்பதே தெரியாமல் இருந்திருப்பார்கள்...
உருப்படியான காதல் அனுபவம் மிக சொற்ப நபர்களுக்கே அரங்கேறியிருக்கும்.
எப்படி உலகில் நல்லவர்கள் மிக குறைவோ அதுபோல நல்ல காதலும் மிக மிக குறைவு....
-இவன் நிரஞ்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக