வெள்ளி, 9 மே, 2014

என்று குறையும் இந்த படிப்பு மீதான பைத்தியம்?

பிளஸ்டூ தேர்வு முடிவு - கணக்குப் புலிகள் 3,882  பேர்.. தாவரவியலில் 15 பேர் மட்டுமே 200க்கு 200                

                              இன்று +2 தேர்வு முடிவுகள் வந்துள்ளது.... இப்படி ஒரு கேவலமான, பயன் இல்லாத, மனிதனை முட்டாளாக்கும்  கல்வியை மிகவும் சூழ்ச்சியாக மெக்கலே(வெள்ளையன்) உருவாக்கி வச்சிருக்கான்....  அந்த சூழ்ச்சி அரசியல் பண்றதுக்கும் கொள்ளை அடிக்கிறதுக்கும் நல்ல சாதகமா இருக்குனு இவனுங்களும் அப்படியே வச்சிருக்கானுங்க.... இது ஒரு கல்வியா?

இதுல படிச்சு அதிக மதிப்பெண் எடுத்ததுக்காக சந்தோஷ படுவதை விட முட்டாள் தனம் வேறொன்றும் இல்லை... இதை பாராட்டுவதை விட முட்டாள் தனம் வேறொன்றும் இல்லை.... மதிப்பெண் எடுத்த மாணவி இதுக்கு என் ஆசிரியர் தான் காரணம் என்று சொல்வதை விட மோசமான தருணம் வேறெதுவும் இல்லை... 

சரி அது இருக்கட்டும் இந்த பத்திரிக்கை காரனுங்க, டி.வி. காரனுங்க இது ஒரு விஷயம்னு எதுக்கு இதை படம் புடிச்சு போடறாங்க?... இந்த கேவலமான கல்வியில் ஒருவன் தோல்வி அடைந்தால் அவனது பெற்றோர்கள் எதுக்கு இவ்ளோ ஆத்திரப் படுறீங்க ?

இதை ஒரு பெரிய விஷயமா நினைக்காதீங்க, இது கவுரவம் இல்லை. இந்த கல்வி ஒரு சூழ்ச்சி... இதில் பயனில்லை.. இதுல நல்ல படிச்சவனும், படிக்கதவனும் ஒன்னு தான்.. இதுக்கு போயி எவனும் தற்கொலை பண்ணிக்காதீங்க, ஒரு சொட்டு கண்ணீர் கூட வேண்டாம், மாறாக சிரிங்க, செத்துப்போன மெக்கலே காதுல விழுகுற மாதிரி சிரிங்க...

இவன்
நிரஞ்சன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக