வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை பற்றி சொல்கிறேன் கேளுங்கள்.
நல்ல எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது. தலையில் மட்டும் அல்ல உடல் முழுவதும் (மர்ம உறுப்புகள், பாதங்கள் உட்பட) தேய்த்து குளிக்க வேண்டும். காதுகளில் இரண்டு சொட்டு எண்ணெய் விடுவது நல்லது. ரொம்ப முக்கியம் gold winner போன்ற கடைகளில் விற்க படும் எண்ணெய் வேண்டாம். சுத்தமாக செக்கில் ஆட்டிய எண்ணெய். உபயோகிக்கவும். அவை அனைத்து இடத்திலும் கிடைக்கும். இல்லை என்றால் நீங்களே எள்ளு வாங்கி மில்லில் கொடுத்து அரைத்து வாங்கி கொள்ளலாம்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்கள்:
ஆண்கள் சனி, புதன்.
பெண்கள் செவ்வாய், வெள்ளி.
மற்ற நாட்களில் குளிப்பது நல்லது அல்ல
பலர் ஞாயிறு விடுமுறை என்பதால் அன்று தான் குளிக்கிண்டனர். அது தவறு. "ஞாயிற்று கிழமை கழுதை கூட எள்ளு காட்டு பக்கம் போகாது" என்பது பழமொழி. சனி நீராடு என்பதும் பழ மொழி. நீங்கள் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமையில், குளிக்க கூடாது. குளித்தால் பலன் கொஞ்சம் குறையும் அவ்வளவு தான்.
தேய்க வேண்டிய நேரம்:
காலை 5 - 7 (நல்லது)
7 - 12(குறைந்த பலன்)
12 க்கு மேல் பலன் இருக்காது.
உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் வைத்து இருந்து பிறகு குளிக்கவேண்டும். ரொம்ப நேரம் தேய்த்து வைத்திருக்க கூடாது.
எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்ய கூடாதவை:
1. தூங்க கூடாது.
தூங்கினால் பலன் இருக்காது இரவு வரை தூங்க கூடாது. ஏன் என்றால் உங்கள் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறி கொண்டிருக்கம். அப்போது தூங்கினால் உடல் பாதிக்கும். ஆனால் தூக்கம் வரும்.
2. உடலுறவு (sex) கூடாது.
3. உடல் தேய்த்து வைத்திருக்கும்போது கண்ணாடி பார்க்க கூடாது.
4.பழங்கள், மோர், தயிர், பால், ஜூஸ், ஐஸ் க்ரீம் , போன்ற எந்த குளிர்ச்சி பொருட்களும் உன்ன கூடாது.
5. ஓடி ஆடி வேலை செய்யவோ, விளையாடவோ கூடாது. முழுக்க முழுக்க ஓய்வாக இருக்க வேண்டும் ஆனால் தூங்க கூடாது.
அவசியம் செய்யுங்கள்.
இவன் நிரஞ்சன்