சனி, 14 ஜூன், 2014

கல்வி ஓர் கிளைச் சாக்கடை:

இக்கல்வி ஓர் கிளை சாக்கடை. அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் கூறுகின்றீர்கள். அப்படியானால் அதில் ஒரு பிரிவாய் இருக்கும் இந்த கல்வியும் சாக்கடையாக தானே இருக்கும். பிறகு ஏன் இந்த கல்வியை உங்கள் பிள்ளைகளுக்கு திணிக்கிறீர்கள்? எப்படி இந்த கல்வியை உயர்வாக நினைக்கிறீர்கள்? ஏன் அதன் மீது இவ்ளோ மோகம்? ஏன் சிறந்த பள்ளிகூடத்தில் உங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று பைத்தியம் பிடித்து நிற்கின்றீர்கள்? கல்வியே சரி இல்லை என்பதை உணர்ந்து விட்டால் பள்ளிகூட மோகம் இருக்காது. உங்கள் பைத்தியகார தனத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். அவர்கள் வைக்கும் ப்ளெக்ஸ் போர்ட், அவர்கள் செய்யும் விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்.

சிந்தியுங்கள். இந்த கல்வி ஒரு சாக்கடை. நீங்கள் ஏன் சாக்கடையில் மொய்த்து கொண்டிருக்கும் கொசு போல இருக்கிறீர்கள்.

இவன்
நிரஞ்சன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக