செவ்வாய், 24 மார்ச், 2015

டெல்டா வரை லீ குவான் யூ மரணம்


தமிழர்களுக்கு லீ குவான் யூ மிகவும் தொடர்புடையவர்... ஏனெனில் இங்கே பலர் வாழ்கையில்  செட்டில் ஆனது சிங்கப்பூர் காசை கொண்டு தான்.... முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் சிங்கப்பூர் காசு தான் பல மாடி வீடுகளை உருவாக்கியது... அங்கே குட்டி சிங்கபூர் (கூப்பாச்சிக்கோட்டை) சின்ன சிங்கபூர்(லக்ஷ்மாங்குடி) உருவாகும் அளவுக்கு சிங்கபூர் தாக்கம் இருக்கிறது...லீ குவான் யூ நேற்று(மார்ச் 23, 2015) மரணம் அடைந்தார். அவர் மரணத்திற்கு மன்னார்குடியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை...அங்கே உறவினர் துக்கத்துக்கே சிங்கபூர் கைலியுடன் தான் துக்கம் விசாரிக்க செல்வது வழக்கம், லீ குவான் யூ துக்க செய்தி தற்போது அங்கே சிங்கபூர் கைலியுடன் பலரால் பேச பட்டுக்கொண்டு இருக்கும். லீ குவான் யூவின் மரண செய்தி சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டும் அல்ல, டெல்டா மாவட்ட மக்களையும் வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது...

இவன்
நிரஞ்சன்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

டாலர் தேசம்- நான் படித்த புத்தகம்

டாலர் தேசம்- அமெரிக்காவின் அரசியல் வரலாறு- எழுதியவர் பா.ராகவன்.


நான் பல தடைகளை தாண்டி இந்த புத்தகத்தை படித்து முடித்தேன்... 857 பக்கங்கள்...  நான் படிக்க எடுத்துக்கொண்ட நாட்கள் ஒரு 8 நாட்கள்.  ஒரு நாட்டின் அரசியல் வரலாறு இப்படி தான் எழுதப்பட வேண்டும்.. பா.ராகவன் எழுத்துக்கள் மிக நேர்த்தியானது, சுவாரஷ்யமானது. வாஷிங்டன்,லிங்கன்,ஹிட்லர், ரூஸ்வல்ட், ஒசாமா பின்லேடன் மாதிரியான முக்கிய நபர்களுக்கு அவர் கொடுக்கும் intro மிக சுவாரஷ்யமானது. முக்கியமாக கம்யூனிசத்தை "நூதன ஜுரம்" என்று வருணித்தது எனக்கு மிகவும் பிடித்தவை. கறுப்பின மக்கள் மற்றும் செவ்விந்தியர்களின் கதை ஆழமாக பதிந்தவை. அவர் இப்புத்தகத்தை எழுதியதன் நோக்கமாக கூறியிருப்பது "அமெரிக்காவை புரிந்துகொள்ளுங்கள்" என்பதே... நான் அமெரிக்காவை  புரிந்துகொள்ள பெரிதும் இந்நூல் உதவியது.

அவர் எழுதிய வரிகளுள் சில,

"நாநூறு வருட சரித்திரம் கொண்ட தேசம் அது. அத்தேசம் நாநூறு வருடங்களில் குறைந்தது நூறு யுத்தங்களிலாவுது பங்கேற்றிருக்கிறது. உள்நாட்டு யுத்தம் தொடங்கி உலக யுத்தம் வரை. வியட்நாம் யுத்தம் தொடங்கி வளைகுடா யுத்தம் வரை.

ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த அரசியலையும் யுத்தங்கள் தான் தீர்மானித்திருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அரசியல்வாதிகள் யுத்தங்களை தீர்மானிப்பதும் யுத்தங்கள் அரசியலை தீர்மானிப்பதும்  முடிவற்ற பெரும் சுழல். யுத்தங்களை வருமானம் தரும் ஒரு தொழிலாகவே அவர்கள் வைத்து இருந்திருக்கிறார்கள்.

நமக்கு தெரிந்த அமெரிக்கா  நிஜமான அமெரிக்கா அல்ல. அதன் பளபளப்புக்கு பின்னால் இருக்கும் அழுக்குகள், அதன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் சறுக்கல்கள், அதன் ஜனநாயகத்துக்கு பின்னால் இருக்கும் சர்வாதிகாரம், அதன் ஸ்டைலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ச்லம். அதன் பணபலத்துக்கு பின்னால் இருக்கும் கடன் சுமைகள், அதன் அதிகாரத்துக்கு பின்னால் இருக்கும் அச்சுறுத்தல்கள். இவையெல்லாம் தான் நிஜமான அமெரிக்கா." 

படிக்கும் ஆசை வருகிறதா?

பின் குறிப்பு: கூடிய சீக்கிரம் ரூபாய் தேசமும் அவர் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

நன்றி krishna prasath

இவன் 
நிரஞ்சன்

சனி, 7 மார்ச், 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 6: என்னை மட்டும்


சம்பளம் வாங்கிய முதல் நாளே என் சம்பள பணத்தில் 7000 ரூபாய்க்கு நகை வாங்கி செலவு வைத்த என் மனைவியை இரவு பண்ணிரண்டு மணிக்கு அவள் தூங்கிகொண்டிருக்கும்போது வெறியுடன் பார்த்தேன். பெண் பார்க்க சென்றபோதும் முதல் இரவின்போதும் எனக்கு தேவதை போல் காட்சியளித்தவள் தற்போது ஒரு பிசாசு போல் காட்சியளித்தாள். எனக்குள் ஒரு வெறி எழுந்தது. நினைவில் நான் சம்பாதிக்க பட்ட கஷ்டம், அடைந்த அவமானம், இழந்த வாழ்கை. வெறி உச்சத்தை அடைந்து நான் அமர்ந்திருந்த இரும்பு நாற்காலியை தூக்கி அவளை அடியோ அடி என்று அடித்து கொன்று விட்டேன்..... காவல் துறை என்னை மட்டும் கைது செய்தது.

இவன்
நிரஞ்சன்.

வெள்ளி, 6 மார்ச், 2015

எனக்கு பிடிக்கும் ஹோலி பண்டிகை


இன்று ஹோலி பண்டிகை. குளிர் காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்துக்களால் இப்பண்டிகை கொண்டாட படுகிறது ... வண்ணமயமான, அழகான, மிக கொண்டாட்டமான, எனக்கு பிடித்த பண்டிகை... மிருகத்தனம், பயம், மொக்கையான விருப்பம், அசிங்கமான கவுரவம் போர்த்திக்கொள்லாத பண்டிகை...வெடி வெடித்து கொண்டாடுவதை காட்டிலும் இது மிக மிக சிறப்பானது தான்...

இவன்
நிரஞ்சன்.