டாலர் தேசம்- அமெரிக்காவின் அரசியல் வரலாறு- எழுதியவர் பா.ராகவன்.
நன்றி krishna prasath
நான் பல தடைகளை தாண்டி இந்த புத்தகத்தை படித்து முடித்தேன்... 857 பக்கங்கள்... நான் படிக்க எடுத்துக்கொண்ட நாட்கள் ஒரு 8 நாட்கள். ஒரு நாட்டின் அரசியல் வரலாறு இப்படி தான் எழுதப்பட வேண்டும்.. பா.ராகவன் எழுத்துக்கள் மிக நேர்த்தியானது, சுவாரஷ்யமானது. வாஷிங்டன்,லிங்கன்,ஹிட்லர், ரூஸ்வல்ட், ஒசாமா பின்லேடன் மாதிரியான முக்கிய நபர்களுக்கு அவர் கொடுக்கும் intro மிக சுவாரஷ்யமானது. முக்கியமாக கம்யூனிசத்தை "நூதன ஜுரம்" என்று வருணித்தது எனக்கு மிகவும் பிடித்தவை. கறுப்பின மக்கள் மற்றும் செவ்விந்தியர்களின் கதை ஆழமாக பதிந்தவை. அவர் இப்புத்தகத்தை எழுதியதன் நோக்கமாக கூறியிருப்பது "அமெரிக்காவை புரிந்துகொள்ளுங்கள்" என்பதே... நான் அமெரிக்காவை புரிந்துகொள்ள பெரிதும் இந்நூல் உதவியது.
அவர் எழுதிய வரிகளுள் சில,
"நாநூறு வருட சரித்திரம் கொண்ட தேசம் அது. அத்தேசம் நாநூறு வருடங்களில் குறைந்தது நூறு யுத்தங்களிலாவுது பங்கேற்றிருக்கிறது. உள்நாட்டு யுத்தம் தொடங்கி உலக யுத்தம் வரை. வியட்நாம் யுத்தம் தொடங்கி வளைகுடா யுத்தம் வரை.
ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த அரசியலையும் யுத்தங்கள் தான் தீர்மானித்திருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அரசியல்வாதிகள் யுத்தங்களை தீர்மானிப்பதும் யுத்தங்கள் அரசியலை தீர்மானிப்பதும் முடிவற்ற பெரும் சுழல். யுத்தங்களை வருமானம் தரும் ஒரு தொழிலாகவே அவர்கள் வைத்து இருந்திருக்கிறார்கள்.
நமக்கு தெரிந்த அமெரிக்கா நிஜமான அமெரிக்கா அல்ல. அதன் பளபளப்புக்கு பின்னால் இருக்கும் அழுக்குகள், அதன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் சறுக்கல்கள், அதன் ஜனநாயகத்துக்கு பின்னால் இருக்கும் சர்வாதிகாரம், அதன் ஸ்டைலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ச்லம். அதன் பணபலத்துக்கு பின்னால் இருக்கும் கடன் சுமைகள், அதன் அதிகாரத்துக்கு பின்னால் இருக்கும் அச்சுறுத்தல்கள். இவையெல்லாம் தான் நிஜமான அமெரிக்கா."
படிக்கும் ஆசை வருகிறதா?
பின் குறிப்பு: கூடிய சீக்கிரம் ரூபாய் தேசமும் அவர் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
பின் குறிப்பு: கூடிய சீக்கிரம் ரூபாய் தேசமும் அவர் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
நன்றி krishna prasath
இவன்
நிரஞ்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக