வெள்ளி, 28 செப்டம்பர், 2012

வஜ்ராசனம்


வஜ்ராசனம் யோகசனங்களிலே சிறந்த ஆசனம் என்று கூறுவார்.'வஜ்ரம்' என்றால் உறுதி என்று பொருள். ஆகவே இந்த ஆசனம் செய்தால் உடல் உறுதி அடையும். உடல் பலம் பெரும்.
செய்முறை: இடது கால் கட்ட விரலில் வலது கால் கட்ட விரலை வைத்து அமரவேண்டும்



மனம் : அடிவயிறு, தொடைப்பகுதி



மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: உடல் உறுதி அடையும். அடிவயிற்றுப் பகுதியில் இரத்தஓட்டம் அதிகமாகும். ஜீரண சக்தி மிக அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும். தினமும் செய்தால் காய்ச்சல், மலச்சிக்கல், அஜீரணம் வராது.


ஆன்மீக பலன்கள்: மனம் உறுதி அடைய இந்த ஆசனம் செய்யலாம். இந்த ஆசனத்தில் தியானம், பிராணயாமம் செய்யலாம்.

சிறப்பு: இந்த ஆசனத்தை எல்லா நேரத்திலும் செய்யலாம். சாப்பிட்ட பின்னரும் செய்யக்கூடிய ஆசனம்.





                      

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

udhayakumar speech in puthiya thalaimurai

உதயகுமாரின் அனல் பறக்கும் பேச்சு பாகம் 1



                                            பாகம் 2



                               
                                             பாகம் 3




                                            பாகம் 4



புதன், 12 செப்டம்பர், 2012

சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள்

சூரியன் மறைதல் Sunset

           காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று; மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும். ஆனால் சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன. நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. விஞ்ஞானமும் இதனை ஒப்புகொள்கிறது. பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.

-இவன் நிரஞ்சன்


செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஆணும் பெண்ணும் சமம் அல்ல


ஆணும் பெண்ணும் சமம் இல்லை... ஒன்றை ஒன்று உயர்ந்ததும் தாழ்ந்ததும் இல்லை... இரண்டுமே வேறு வேறு.. சமம் இல்லை...ஆணும் மிக பெரிய தன்மை...பெண்ணும் மிக பெரிய தன்மை.. ஆண் உயிரை கொடுப்பவன்...பெண் உருவை கொடுப்பவள்....இது தான் படைப்பு தத்துவம்... எப்படி இரண்டும் சமம் ஆகும்?

இவன்
நிரஞ்சன் 

ஆய கலைகள் அறுபத்துநான்கு !!!


indian-dance-bharathanatiyam

ஆய கலைகள் 64 எவை எவை என்று தெரியுமா?

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) !!!

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஜோதிடம்: விருட்ச சாஸ்திரம்


       ருவரது பிறந்த நட்சத்தரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில்(சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர்,திருப்பதி,திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.(வீட்டிலும் நடலாம்) அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.
இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:


1.அசுவினி - எட்டிமரம்

2.பரணி - நெல்லி

3.கார்த்திகை - அத்திமரம்

4.ரோகிணி - நாவல்

5.மிருகசீரிடம் - கருங்காலி

6.திருவாதிரை - செங்கருங்காலி

7.புனர்பூசம் - மூங்கில்

8.பூசம் - அரச மரம்

9.ஆயில்யம் - புன்னை

10.மகம் - ஆலமரம்

11.பூரம் - பலாசு மரம்  (புரசு)

12.உத்திரம் - அலரி

13.அஸ்தம் - வேலம்

14.சித்திரை - வில்வம்

15.சுவாதி - மருதம்

16.விசாகம் - விளா மரம்

17.அனுஷம் - மகிழம்

18.கேட்டை - பிராய்

19.மூலம் - மாமரம்

20.பூராடம் - வஞ்சி

21.உத்திராடம் - பலா மரம் (சக்கை பலா)

22.திருவோணம் - எருக்கு(வெள்ளெருக்கு)

23.அவிட்டம் - வன்னி

24.சதயம் - கடம்பு (கடம்பை மரம்)

25.பூரட்டாதி - தேமா-தேற்றா மரம்(கரு மருது)

26.உத்திரட்டாதி - வேப்ப மரம்

27.ரேவதி - இலுப்பை

சனி, 8 செப்டம்பர், 2012

முறையற்ற கல்வி முறை



நம் இந்திய கல்வி திட்டம் முறையின்றி உள்ளது. அதில் பலவற்றுள் ஒன்று தான் 'revaluation' என்பது. தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவனுக்கு, அந்த தேர்வை சரியாக தான் எழுதி இருந்தேன். நான் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தாலோ (அல்லது)தேர்ச்சி அடைந்தும் மதிப்பெண் தான் எழுதியதற்கு குறைவாகவே உள்ளது என்று நினைத்தாலோ, அம்மாணவன் 'revaluation' செய்யலாம். இதற்கு கட்டணம் வேறு 700 ரூ முதல் 850 ரூ வரை செலுத்தவேண்டும். முதலில் சரியாக விடை தாள்களை திருத்தினால் பிறகு எதற்கு revaluation என்பதே என் கேள்வி. இதில் என்ன கொடுமை என்றால் revaluation செய்பவர்களில் பெரும்பாலானோர் தேர்ச்சி அடைகிறார்கள். என் கல்லூரியிலும் என் சக மாணவர்கள் revaluation கு அனுப்பி தேர்ச்சி அடைந்துள்ளனர். மறுமுறை திருத்தப்பட்டு தேர்ச்சி அடைந்தால் முதலில் தவறாய் திருத்தியது ஏன்? அவ்வாறு திருத்தி தேர்ச்சி அடைந்த மாணவனுக்கு 850 ரூ நஷ்டம் தானே? அதை அம்மாணவன் தேர்ச்சி அடைந்த பிறகாவது திருப்பி தநதால் என்ன? முதலில் தோல்வி அடைந்த மாணவன் பிறகு தேர்ச்சி அடைகிறான் என்றால் revaluation என்பது 850 ரூபாய்காக தானா? வசதியற்ற மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் மறுமுறை semester எழுதுவதும் உண்டு. என்ன கொடுமை. இவ்வாறு கல்வி துறையில் நடக்கும் ஊழல்களுக்கு மாற்று என்ன? எங்களை போன்ற இளைய தலைமுறையினரை ஏன் இப்படி வதைக்கிறது இந்த கல்வி?

-இவன் நிரஞ்சன்

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இந்திய தேசிய கோடி

ம் இந்திய தேசிய கொடி எப்படி இருக்க வேண்டும், அதற்கு எப்படி  நாம் மரியாதை செலுத்த வேண்டும்.  அதை பயன்படுத்தும் போது   கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளது.இவை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டது அவை:
           
Flag Foundation Of India
இந்திய தேசிய கோடி 
    *தேசிய  கொடி  செவ்வக வடிவில், நீள  அகலம் 3:2 எனும் விகிதத்தில், மேலே காவி வண்ணம் நடுவே வெண்மை நிறம் கீழே பச்சை வெண்மையின் நடுவில் நீல நிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் இருக்க வேண்டும். 
                     
*தேசிய  கொடி  கம்பளி, கதர் மற்றும் பட்டு துணிகளால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும் 

*கொடியின் அளவு(milli metre): 6300-4200, 3600-2400, 2700-1800, 1350-900, 900-600, 450-300, 225-150, 150-100, 

*தனியார் நிறுவனங்கள், தனிமனிதர்கள் பயன்படுத்த தடை இல்லை. அதற்குரிய மரியாதை கொடுப்பதே அவசியம்.

*பொது இடத்தில தேசிய  கொடியை அவமதித்தல், கிழித்தல், எரித்தல், போன்றவை தண்டனைக்குரியவை.

*எந்த பொருளையும் மூடிவைக்க தேசிய  கொடியை அலங்கார பொருளாய்  பயன் படுத்த கூடாது.

Flag Foundation Of India
                 
 *தேசிய  கொடியை சட்டையாகவோ, கைகுட்டையாகவோ பயன்படுத்துதல் கூடாது.

Flag Foundation Of India

*சூரிய உதயத்துக்கு பிறகு தான்  கொடி  ஏற்ற பட வேண்டும், அதேபோல் மறைவதற்கு முன்பே இறக்கிவிட வேண்டும்.

*அரசு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் பயணிக்கும் கார்களில் வலது புறம் நம் தேசிய கொடியும் இடது புறம் அந்நாட்டு தேசிய கொடியும் இடம் பெற  வேண்டும் .

*பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் நம் தேசிய  கொடி  முதலாவதாக ஏற்றப்பட்டு இறுதியாக இறக்க படவேண்டும். பிற நாட்டு கொடிகள் அந்நாட்டு ஆங்கில பெயரின் அகர வரசையில் ஏற்றபடவும் இறக்கபடவும் வேண்டும்.

Flag Foundation Of India

*பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் மறைவின் போது  நாடெங்கிலும், சபாநாயகர் ,சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகியோர் இறந்தால் தில்லி மற்றும் அவர் சார்ந்த மாநிலத்திலும், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மறைந்தால் அந்தந்த  மாநிலத்திலும்  தேசிய  கொடி  அரை கம்பத்தில் பறக்க விடப்படும் .

 *அரைக்கம்பத்தில் உள்ள தேசிய  கொடியை இறக்கும்போது,  முழு கம்பத்திலும் ஏற்றிய பிறகே இறக்க வேண்டும் .

               
                  தமிழகத்தின் தலைமை செயலகத்தில் உள்ள கொடி கம்பம் தான் இந்தியாவிலேயே மிக பெரியது .