நம் இந்திய கல்வி திட்டம் முறையின்றி உள்ளது. அதில் பலவற்றுள் ஒன்று தான்
'revaluation' என்பது. தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவனுக்கு, அந்த தேர்வை சரியாக தான் எழுதி இருந்தேன். நான் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தாலோ (அல்லது)தேர்ச்சி அடைந்தும் மதிப்பெண் தான் எழுதியதற்கு குறைவாகவே உள்ளது என்று நினைத்தாலோ, அம்மாணவன்
'revaluation' செய்யலாம். இதற்கு கட்டணம் வேறு
700 ரூ முதல் 850 ரூ வரை செலுத்தவேண்டும். முதலில் சரியாக விடை தாள்களை திருத்தினால் பிறகு எதற்கு
revaluation என்பதே என் கேள்வி. இதில் என்ன கொடுமை என்றால்
revaluation செய்பவர்களில் பெரும்பாலானோர் தேர்ச்சி அடைகிறார்கள். என் கல்லூரியிலும் என் சக மாணவர்கள்
revaluation கு அனுப்பி தேர்ச்சி அடைந்துள்ளனர். மறுமுறை திருத்தப்பட்டு தேர்ச்சி அடைந்தால் முதலில் தவறாய் திருத்தியது ஏன்? அவ்வாறு திருத்தி தேர்ச்சி அடைந்த மாணவனுக்கு
850 ரூ நஷ்டம் தானே? அதை அம்மாணவன் தேர்ச்சி அடைந்த பிறகாவது திருப்பி தநதால் என்ன? முதலில் தோல்வி அடைந்த மாணவன் பிறகு தேர்ச்சி அடைகிறான் என்றால்
revaluation என்பது
850 ரூபாய்காக தானா? வசதியற்ற மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் மறுமுறை
semester எழுதுவதும் உண்டு. என்ன கொடுமை. இவ்வாறு கல்வி துறையில் நடக்கும் ஊழல்களுக்கு மாற்று என்ன? எங்களை போன்ற இளைய தலைமுறையினரை ஏன் இப்படி வதைக்கிறது இந்த கல்வி?
-இவன் நிரஞ்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக