ஒருவரது பிறந்த நட்சத்தரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில்(சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர்,திருப்பதி,திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.(வீட்டிலும் நடலாம்) அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.
இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:
1.அசுவினி - எட்டிமரம்
2.பரணி - நெல்லி
3.கார்த்திகை - அத்திமரம்
4.ரோகிணி - நாவல்
5.மிருகசீரிடம் - கருங்காலி
6.திருவாதிரை - செங்கருங்காலி
7.புனர்பூசம் - மூங்கில்
8.பூசம் - அரச மரம்
9.ஆயில்யம் - புன்னை
10.மகம் - ஆலமரம்
11.பூரம் - பலாசு மரம் (புரசு)
12.உத்திரம் - அலரி
13.அஸ்தம் - வேலம்
14.சித்திரை - வில்வம்
15.சுவாதி - மருதம்
16.விசாகம் - விளா மரம்
17.அனுஷம் - மகிழம்
18.கேட்டை - பிராய்
19.மூலம் - மாமரம்
20.பூராடம் - வஞ்சி
21.உத்திராடம் - பலா மரம் (சக்கை பலா)
22.திருவோணம் - எருக்கு(வெள்ளெருக்கு)
23.அவிட்டம் - வன்னி
24.சதயம் - கடம்பு (கடம்பை மரம்)
25.பூரட்டாதி - தேமா-தேற்றா மரம்(கரு மருது)
26.உத்திரட்டாதி - வேப்ப மரம்
27.ரேவதி - இலுப்பை
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே மேலும் என்னுடைய கேள்வி என்னவென்றால் மரம் நாட்டி விட்டு நாம் அதை எப்படி பராமரிக்க வேண்டும்? உதாரணம் இப்போது நான் சதுரகிரியில் மரம் செடி நடுகிறேன் என்றால் நான் வாழும் சென்னையில் இருந்து அதை நான் பாதுகாக்க முடியாது, இப்போது என் மரத்தை அல்லது வளர்ந்து வரும் செடியை ஆடோ மாடோ, இல்லை அந்த வழியில் செல்லும் மானுட பக்கிகளோ கடித்து வைத்து என் செடியை நாசம் செய்து வைத்திருந்தால், அப்போது எனக்கு என்ன நடக்கும்? மேலும் ஏன் வாழ்வு மேலும் வளம் பெற நான் பாட்டுக்கு ஒன்றுக்கு ஐந்து மரக்கன்றுகள் நட்டால் எனக்கு என்ன நடக்கும்?
பதிலளிநீக்குகோயிலில் நட்டால் கோயிலை பராமரிபவர்கள் இதையும் பராமரிப்பார்கள். மேலும் அதிக மரங்களை நடுவதால் அதிக பலன் நிச்சயம் உண்டு. வீட்டில் பராமரித்தால் நீங்களே தண்ணி ஊற்றலாம், அதில் மன திருப்தியும் கிடைக்கும்
பதிலளிநீக்குungalin intha pathivin moolam than naan thala mara virutchathin avasiyam patri nanku therinthukonden. Ivaikalil sila marakandrukal arithaanavaiyaha irukirathu... Ivai anaithum ore idathil kidaikuma? thagaval therinthal pathivu seiyungal...
பதிலளிநீக்குகண்டிபாக
நீக்கு