வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இந்திய தேசிய கோடி

ம் இந்திய தேசிய கொடி எப்படி இருக்க வேண்டும், அதற்கு எப்படி  நாம் மரியாதை செலுத்த வேண்டும்.  அதை பயன்படுத்தும் போது   கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளது.இவை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டது அவை:
           
Flag Foundation Of India
இந்திய தேசிய கோடி 
    *தேசிய  கொடி  செவ்வக வடிவில், நீள  அகலம் 3:2 எனும் விகிதத்தில், மேலே காவி வண்ணம் நடுவே வெண்மை நிறம் கீழே பச்சை வெண்மையின் நடுவில் நீல நிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் இருக்க வேண்டும். 
                     
*தேசிய  கொடி  கம்பளி, கதர் மற்றும் பட்டு துணிகளால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும் 

*கொடியின் அளவு(milli metre): 6300-4200, 3600-2400, 2700-1800, 1350-900, 900-600, 450-300, 225-150, 150-100, 

*தனியார் நிறுவனங்கள், தனிமனிதர்கள் பயன்படுத்த தடை இல்லை. அதற்குரிய மரியாதை கொடுப்பதே அவசியம்.

*பொது இடத்தில தேசிய  கொடியை அவமதித்தல், கிழித்தல், எரித்தல், போன்றவை தண்டனைக்குரியவை.

*எந்த பொருளையும் மூடிவைக்க தேசிய  கொடியை அலங்கார பொருளாய்  பயன் படுத்த கூடாது.

Flag Foundation Of India
                 
 *தேசிய  கொடியை சட்டையாகவோ, கைகுட்டையாகவோ பயன்படுத்துதல் கூடாது.

Flag Foundation Of India

*சூரிய உதயத்துக்கு பிறகு தான்  கொடி  ஏற்ற பட வேண்டும், அதேபோல் மறைவதற்கு முன்பே இறக்கிவிட வேண்டும்.

*அரசு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் பயணிக்கும் கார்களில் வலது புறம் நம் தேசிய கொடியும் இடது புறம் அந்நாட்டு தேசிய கொடியும் இடம் பெற  வேண்டும் .

*பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் நம் தேசிய  கொடி  முதலாவதாக ஏற்றப்பட்டு இறுதியாக இறக்க படவேண்டும். பிற நாட்டு கொடிகள் அந்நாட்டு ஆங்கில பெயரின் அகர வரசையில் ஏற்றபடவும் இறக்கபடவும் வேண்டும்.

Flag Foundation Of India

*பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் மறைவின் போது  நாடெங்கிலும், சபாநாயகர் ,சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகியோர் இறந்தால் தில்லி மற்றும் அவர் சார்ந்த மாநிலத்திலும், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மறைந்தால் அந்தந்த  மாநிலத்திலும்  தேசிய  கொடி  அரை கம்பத்தில் பறக்க விடப்படும் .

 *அரைக்கம்பத்தில் உள்ள தேசிய  கொடியை இறக்கும்போது,  முழு கம்பத்திலும் ஏற்றிய பிறகே இறக்க வேண்டும் .

               
                  தமிழகத்தின் தலைமை செயலகத்தில் உள்ள கொடி கம்பம் தான் இந்தியாவிலேயே மிக பெரியது . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக