வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மக்களாகிய நாம்: நான் படித்த புத்தகம்

மக்களாகிய நாம்- ஆ.கி.வேங்கட சுப்பிரமணியன்

    

இப்புத்தகத்தை எழுதியவர் ஆ.கி. வெங்கட சுப்பிரமணியன். IAS அதிகாரி.
இப்புத்தகத்தை என்னை படிக்க தூண்டியது அதன் முன் அட்டையில் இருக்கும் வரிகள்.. அவை "இந்த அரசியல்வாதிகளைத் திருத்தவே முடியாது என்று வெறுமனே அங்கலாயித்துகொள்வதில் பொருள் இல்லை. அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் துடிப்பான பிரஜைகளாக நாம் மாறியாக வேண்டும். நமக்குத் தேவையானதை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். தயாரா?" இதுவே அது.

நானும் தயாரானேன்.. ஆனால் அப்படி ஒன்றும் தயார் படுத்தவில்லை. 2001, 2006 தேர்தலில் நடந்த கலாட்டா, ஊராட்சியில் நடந்த சம்பவங்கள், வாக்கு சாவடியில் நடந்த தில்லுமுல்லுகள், தேர்தல் ஆணையம் தூங்கிய நிலை போன்ற தகவல்கள் தான் இருந்தது..அப்பயனை போற்றுவோம். இன்னொன்று நம் நாட்டில் தீதிமன்ற தீர்ப்பை அரசாங்கமே எங்கும் ஏற்றதில்லை என்பதும் தெரிகிறது.. "சிந்திக்க சில கருத்துகள்" என்னும் தப்பில் பல அறிஞர்களின் வரிகள் இடம்பெற்றிருந்தன. அவை பலமான கருத்துக்களாக இருந்தது.. மேலும் நல்ல காலம் வந்தாச்சு என்னும் தலைப்பில் இருந்த விஷயங்களும் சிறப்பு.

இவன்
நிரஞ்சன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக