வெள்ளி, 5 டிசம்பர், 2014

நிரஞ்சன் எழுத்துக்கள் 1: பெரும்பான்மையினன்


"தினம் தினம் இந்த சமூக சூழல் என்னை பாடாய் படுத்துவதால் நான் தினம் தினம் அழுகிறேன்

நான் சந்தோசப்படுகிறேன், அழுவதால் எனக்கு சொரணை இருக்கிறது என்பதை நினைத்து.

அப்போது வருந்துகிறேன், நான் தாயின் வயிற்றில் இருந்து ஜனனம் ஆனபோது கஷ்டம் தாங்காமல் அழுதேன். இன்றுவரையும் கஷ்டம் என்றால் அழுதுகொண்டு மட்டுமே இருக்கிறேன் என்பதை நினைத்து.

மீண்டும் சந்தோசப்படுகிறேன், பிறக்கும்போது எனக்கு கிடைத்த அழும் உரிமை இன்றும் என்னிடம் இருந்து பறிக்க படாமல் இருப்பதை நினைத்து"

வியாழன், 27 நவம்பர், 2014

புரூஸ் லீ ரசிகனாக எனக்கு கோபம் வருகிறது:



உலகம் பார்த்து வியந்த மனிதன் புரூஸ் லீ. வலிமையின் உச்சமாக திகழ்ந்தவர்.

அத்தகைய வலிமைமிக்கவரை நகைச்சுவை நடிகர் சந்தானம் ஒரு தமிழ் திரைப்படத்தில் தமா துண்டு பையன் என்று கேலி செய்கிறார். புரூஸ் லீயை கலாய்க்கும் தகுதி கொஞ்சம் கூட அவருக்கு கிடையாது. பொதுவாக சந்தானம் கவுண்டமணியை காப்பி அடிப்பதாக சொல்வார்கள். கவுண்டமணி புரூஸ் லீயை பல படங்களில் புகழ்ந்தே பேசுவார். காப்பி அடித்தாலும் கூட நல்ல விஷயங்களை காப்பி அடிக்க மாட்டாரா?

கலாய்ப்பது ஒரு தகுதியான விஷயமே இல்லை. எல்லோரையும் கலாய்பது போல்  புரூஸ் லீ யையும்  கலாய்ப்பது புரூஸ் லீ ரசிகனாக எனக்கு கோபம் வருகிறது. அதுவும் அவர் பிறந்தநாளான இன்று  இன்னும் அதிக கோபம் வருகிறது....

இவன்
நிரஞ்சன்

வெள்ளி, 14 நவம்பர், 2014

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்


இதுவரை பிறந்திருக்கும் குழந்தைகளுக்கும், இனி பிறக்க போகும் குழந்தைகளுக்கும், ஏற்கனவே குழந்தையாய் பிறந்து வளர்ந்தவர்களுக்கும், தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும், அதை சுமந்து கொண்டிருக்கும் அந்த தாய்க்கும், குழந்தையை கொடுக்கும் ஆண்களுக்கும், வயிற்றில் சுமந்து வலிக்க வலிக்க பெற்று எடுக்கும் பெண்களுக்கும், குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பவர்களுக்கும், குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குழந்தை மனம் படைத்தவர்களுக்கும், மிக பெரிய கொலைகாரனாக இருந்தாலும் குழந்தைகளை கொல்ல மனமில்லாதவர்க்கும்........... முக்கியமாக குழந்தை பிறக்க காரணமாய் இருக்கும் காமத்துக்கும் என்

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.


இவன்
நிரஞ்சன் 

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

புலி வீடியோ : ஒரு சாவு சுவாரஷ்யம் ஆகி போன கதை:

ஒரு மனிதனுடைய மரணத்தை சுவாரஷ்யமாக பேசிகொண்ட ஊர் எதுவென்று கேட்டால் அது நம் ஊர் தான்.

டெல்லியில் அந்த சம்பவம் நடந்த நாள் முதல் நேற்று வரை, அந்த கொடூரமான வீடியோ காட்சியை ஒவ்வொருவனும் தங்கள் மொபைல் போனில்  ஏற்றி வைத்து கொண்டு சுவாரஷ்யமாக பேசி, விமர்சித்து, மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....

"இவன் ஓடி வரவேண்டிய தானே ஏன் அங்கேயே உட்காந்து இருக்கான்" என்கிறான் ஒருவன்,

"நானாக இருந்தால் அந்த புலியை அடிச்சு போட்டுட்டு வந்திருப்பேன்"
என்கிறான் ஒரு பய..

"இவன யாரு திமிரு எடுத்து போயி அங்க போக சொன்னது" என்கிறான் ஒருத்தன்" (ஏன்பா மனுஷனா பிறந்தவன் தப்பு செய்ய மாட்டானா? நீங்க தவறே செய்யாத ஆளா? ஒருத்தன் செத்த பிறகு இப்படியாடா பேசுவீங்க?)

இன்னொரு  பய சொல்றான் " அவன் புலியோட சேர்ந்து நின்னு selfie எடுக்க போயிருப்பான்" (இவனை எல்லாம் செருப்பால அடிக்க வேண்டாம்???)

ஒருத்தன் சொல்றான் "அந்த வீடியோ வை என்னோட மொபைலுக்கு அனுப்புங்க... என்னோட பொண்ணுக்கிட்ட இதை காட்டுனா ஜாலியா என்ஜாய் பண்ணுவா"

நேற்று ஒருத்தன் பேஸ்புக்கில் " கத்தி படத்தில் விஜய் அந்த புலியை அடக்குராறு, பூஜை படத்தில் விஷால் TATA SUMO வில் துரத்துராரு" அப்படீன்னு எழுதுறான்...

ஒருவனுடைய கொடூரமான சாவை இப்படி நகைச்சுவையாக கேலி செய்து விளையாடும் அரக்கர்களாக நம் மக்கள் கூட்டம் மாறி வருகிறதே.... ஐயோ ஆண்டவா... இதுக்கு புலி வீடியோன்னு ஒரு பேரு வேற வட்சிருகானுங்க...

இவன்
நிரஞ்சன்

சனி, 18 அக்டோபர், 2014

நம்ம நாட்டுக்கு எதுக்குடா ஷு:


மழை பெய்தால் சாலையில் நடப்பதற்கு நம் யாருக்குமே துப்பு இல்லை..... இப்படி இருக்கையில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு போகும் இடங்கள் என அனைத்து இடத்திற்கும் எதுக்குடா ஷு போட்டுட்டு வர சொல்றீங்க..... நாட்டையும் நாட்டுல இருக்குற ரோட்டையும் இவ்வளவு கேவலமா போட்டுட்டு எதுக்குடா ஷு....

ஒன்னு ஒழுங்க சாலை போடுங்க... இல்லேன்னா யாரும் இந்த நாட்டுல ஷூ போட கூடாதுன்னு சட்டம் கொண்டுட்டு வாங்க... adidas, puma, sport XS, nike போன்ற ஷூ கடைகள் எல்லாம் இழுத்து மூடுங்கட.... இல்லேன்னா பரதேசி நாயிங்களா ஒரு இறக்கையாவுது கொடுங்கட பறந்து போறதுக்கு...

இவன்
நிரஞ்சன் 

வெள்ளி, 11 ஜூலை, 2014

என்னவென்று புரியவில்லை!

coca cola, pepsi, kurkure, lays, bingo, oreo biscuit, etc etc etc இதெல்லாம் கெடுதல்னு ரொம்ப நாட்களாகவே பலரும் சொல்றாங்க... டி.வி , செய்தித்தாள் இப்படி அனைவரும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.. இது உங்கள் காதுகளில் விழுந்து கொண்டு தான் இருக்கிறது... இருந்தும் இதை வாங்கி நக்குவதை நீங்கள் விடுவதில்லை.


இதற்க்கு என்ன காரணம் என்று தான் எனக்கு புரியவில்லை..

நல்லதை உன்ன பிடிக்கவில்லையா? இல்லை கெட்டது தான் பிடிக்குமா? இல்லை திமிரா? இல்லை கொழுப்பா? இல்லை நல்ல புத்தி இல்லையா? இல்லை சொரணை இல்லையா? இல்லை அத்தனை பெரும் நாக்கால் கெட்ட ஜென்மம் ஆகிடீங்களா? இல்லை கெட்டதை தின்னு உடம்பு வீணா போகணும்னு வரம் வாங்கி பிறந்தீங்களா? இல்லை இதை திங்க வேணாம்னு சொல்றவன் எல்லாம் பொய் சொல்றான்னு நினைக்கிறீங்களா? இல்லை அதான் டாக்டர் பயலுவோ இருக்கானுங்களே வைத்தியம் பாத்துக்கலாம்னு நினைக்கிறீங்களா? இல்லை இந்த நாட்டு பள்ளிகூடங்களிலும், கல்லூரிகளிலும் படித்ததனால் மூளை மழுங்கிவிட்டதா? இல்லை நம்ப நாட்டு மக்களுக்கு அரசியல்வாதிகளும், வெள்ளைகாரனுங்களும், முதலாளிகளும் சூனியம் வட்சுடானுங்களா? இல்லை தூக்கி போட்டு மிதி மிதின்னு மிதிச்சா தான் திருந்துவீங்களா? சொல்லி தொலைங்கடா! ஏன்டா இப்படி நக்கி பொறுக்கி பயலுகளா மாறிட்டீங்க?

என்னவென்று எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லையே!!!!!!!!!

இவன்
நிரஞ்சன்

சனி, 28 ஜூன், 2014

சூர்யா கார்த்தி காபி விளம்பரம்:

சிவகுமார் காபி, டீ குடிப்பது கெடுதல். குடிக்க வேண்டாம் என்கிறார். ஆனால் அவர் மகன்கள் நடிகர் சூர்யாவும் கார்த்தியும் குடிக்க சொல்லி விளம்பரம் செய்கிறார்கள். உண்மையில் காபி டீ உடலுக்கு கெடுதல். இது எல்லோருக்கும் தெரிகிறது. காபி நான் குடிக்க மாட்டேன் என்று சொன்னால், நல்ல பழக்கம் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் காபி டீ குடிப்பதை நிறுத்த முடியவில்லை. பொதுவாகவே காபி கெடுதல். நம் நாட்டிற்கோ அதன் தூசி தான் காபி என்ற பெயரில் வருகிறது. அப்படியானால் பார்த்துகொள்ளுங்கள்.

சூர்யா ஜோதிகா சன்ரைஸ்(SUNRISE) விளம்பரம்:

 சூர்யா ஜோதிகா திருமணத்தை பல பைத்தியகாரனுங்க புனிதம் ஆக்குனானுங்க.. பல கேவலமான மிருக பயலுக கொச்சை ஆக்குனானுங்க.. இந்த மாதிரி முதலாளிங்க வியாபாரம் ஆக்குரானுங்க...

கார்த்தி காஜல் ப்ரூ(BRU) விளம்பரம்:

கார்த்தி படத்தில் எப்படி ஈஈஈஈஈஈ  னு இழிப்பாரோ அது மாதிரியே இழிக்கிராறு.... அவர் விளம்பரத்தை பாத்துட்டு பல மனைவிகள் கணவரை ப்ரூ போட்டு தர சொல்லி கேட்க்கிறார்களாம்...

சூர்யா காம்ப்ளான்(COMPLAN) விளம்பரம்:

இந்த விளம்பரத்தில் ஒரு சின்ன பையன் "ஜெயிக்க மனசுல வெறி இருந்த போதும் சூர்யா அப்பா" அப்டின்னு சொல்லிட்டு காம்ப்ளான் ஐ குடிச்சிட்டு உடனே தண்ணீர்ல விழுந்து நீந்துவான். எதாவுது சாப்பிட்ட உடனே தண்ணீர்ல இறங்க கூடாது அப்டீன்னு அறிவியல் சொல்லுது. இந்த சின்ன விஷயம் கூட தெரியாத ஒருத்தன் நீச்சல் வீரனா? ஐயோ செம காமெடி!!!!

"நடிகர்களுக்கு அரசியல் தேவை இல்லை 
ஆனால் அரசியல் ஞானம் தேவை"

இல்லையென்றால் நடிகர்களின் முட்டாள் தனத்தையும், ரசிகர்களின் பைதியகாரத்தனதையும் வியாபாரிகள் பயன்படுத்துவார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் இரண்டு பெண்கள்(சகோதரிகள்). ஒருத்தி சூர்யா ரசிகை(பைத்தியம்) இன்னொருத்தி கார்த்தி ரசிகை(பைத்தியம்). அதனால் அவர்கள் அம்மா ப்ரூ, சன்ரைஸ்  இரண்டு காபி தூளும் வைத்திருப்பார். ஐயோ செம கொடுமை.

இவன்
நிரஞ்சன்.

சனி, 14 ஜூன், 2014

கல்வி ஓர் கிளைச் சாக்கடை:

இக்கல்வி ஓர் கிளை சாக்கடை. அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் கூறுகின்றீர்கள். அப்படியானால் அதில் ஒரு பிரிவாய் இருக்கும் இந்த கல்வியும் சாக்கடையாக தானே இருக்கும். பிறகு ஏன் இந்த கல்வியை உங்கள் பிள்ளைகளுக்கு திணிக்கிறீர்கள்? எப்படி இந்த கல்வியை உயர்வாக நினைக்கிறீர்கள்? ஏன் அதன் மீது இவ்ளோ மோகம்? ஏன் சிறந்த பள்ளிகூடத்தில் உங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று பைத்தியம் பிடித்து நிற்கின்றீர்கள்? கல்வியே சரி இல்லை என்பதை உணர்ந்து விட்டால் பள்ளிகூட மோகம் இருக்காது. உங்கள் பைத்தியகார தனத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். அவர்கள் வைக்கும் ப்ளெக்ஸ் போர்ட், அவர்கள் செய்யும் விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்.

சிந்தியுங்கள். இந்த கல்வி ஒரு சாக்கடை. நீங்கள் ஏன் சாக்கடையில் மொய்த்து கொண்டிருக்கும் கொசு போல இருக்கிறீர்கள்.

இவன்
நிரஞ்சன் 

வெள்ளி, 6 ஜூன், 2014

எண்ணெய் தேய்த்து குளித்தல்

வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை பற்றி  சொல்கிறேன் கேளுங்கள்.


நல்ல எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது. தலையில் மட்டும் அல்ல உடல் முழுவதும் (மர்ம உறுப்புகள், பாதங்கள்  உட்பட) தேய்த்து குளிக்க வேண்டும். காதுகளில் இரண்டு சொட்டு எண்ணெய் விடுவது நல்லது. ரொம்ப முக்கியம் gold winner போன்ற கடைகளில் விற்க படும் எண்ணெய் வேண்டாம்.  சுத்தமாக செக்கில் ஆட்டிய எண்ணெய். உபயோகிக்கவும். அவை அனைத்து இடத்திலும் கிடைக்கும். இல்லை என்றால் நீங்களே எள்ளு வாங்கி மில்லில் கொடுத்து அரைத்து வாங்கி கொள்ளலாம்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்கள்:

ஆண்கள் சனி, புதன்.
பெண்கள் செவ்வாய், வெள்ளி.
மற்ற நாட்களில் குளிப்பது நல்லது அல்ல

பலர் ஞாயிறு விடுமுறை என்பதால் அன்று தான் குளிக்கிண்டனர். அது தவறு. "ஞாயிற்று கிழமை கழுதை கூட எள்ளு காட்டு பக்கம் போகாது" என்பது பழமொழி. சனி நீராடு என்பதும் பழ மொழி. நீங்கள் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமையில்,  குளிக்க கூடாது. குளித்தால் பலன் கொஞ்சம் குறையும் அவ்வளவு தான்.

தேய்க வேண்டிய நேரம்:
காலை 5 - 7 (நல்லது)
                7 - 12(குறைந்த பலன்)
         12 க்கு மேல் பலன் இருக்காது.
உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் வைத்து இருந்து பிறகு குளிக்கவேண்டும். ரொம்ப நேரம் தேய்த்து வைத்திருக்க கூடாது.

எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்ய கூடாதவை:
 1. தூங்க கூடாது.
      தூங்கினால் பலன் இருக்காது இரவு வரை தூங்க கூடாது. ஏன் என்றால் உங்கள் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறி கொண்டிருக்கம். அப்போது  தூங்கினால் உடல் பாதிக்கும். ஆனால் தூக்கம் வரும்.

2. உடலுறவு (sex) கூடாது.

3. உடல் தேய்த்து வைத்திருக்கும்போது கண்ணாடி  பார்க்க கூடாது.

4.பழங்கள், மோர், தயிர், பால், ஜூஸ், ஐஸ் க்ரீம் , போன்ற எந்த குளிர்ச்சி  பொருட்களும் உன்ன கூடாது.

5. ஓடி ஆடி வேலை செய்யவோ, விளையாடவோ கூடாது. முழுக்க முழுக்க ஓய்வாக இருக்க வேண்டும் ஆனால் தூங்க கூடாது.

அவசியம் செய்யுங்கள்.
 
இவன் நிரஞ்சன்

வெள்ளி, 9 மே, 2014

என்று குறையும் இந்த படிப்பு மீதான பைத்தியம்?

பிளஸ்டூ தேர்வு முடிவு - கணக்குப் புலிகள் 3,882  பேர்.. தாவரவியலில் 15 பேர் மட்டுமே 200க்கு 200                

                              இன்று +2 தேர்வு முடிவுகள் வந்துள்ளது.... இப்படி ஒரு கேவலமான, பயன் இல்லாத, மனிதனை முட்டாளாக்கும்  கல்வியை மிகவும் சூழ்ச்சியாக மெக்கலே(வெள்ளையன்) உருவாக்கி வச்சிருக்கான்....  அந்த சூழ்ச்சி அரசியல் பண்றதுக்கும் கொள்ளை அடிக்கிறதுக்கும் நல்ல சாதகமா இருக்குனு இவனுங்களும் அப்படியே வச்சிருக்கானுங்க.... இது ஒரு கல்வியா?

இதுல படிச்சு அதிக மதிப்பெண் எடுத்ததுக்காக சந்தோஷ படுவதை விட முட்டாள் தனம் வேறொன்றும் இல்லை... இதை பாராட்டுவதை விட முட்டாள் தனம் வேறொன்றும் இல்லை.... மதிப்பெண் எடுத்த மாணவி இதுக்கு என் ஆசிரியர் தான் காரணம் என்று சொல்வதை விட மோசமான தருணம் வேறெதுவும் இல்லை... 

சரி அது இருக்கட்டும் இந்த பத்திரிக்கை காரனுங்க, டி.வி. காரனுங்க இது ஒரு விஷயம்னு எதுக்கு இதை படம் புடிச்சு போடறாங்க?... இந்த கேவலமான கல்வியில் ஒருவன் தோல்வி அடைந்தால் அவனது பெற்றோர்கள் எதுக்கு இவ்ளோ ஆத்திரப் படுறீங்க ?

இதை ஒரு பெரிய விஷயமா நினைக்காதீங்க, இது கவுரவம் இல்லை. இந்த கல்வி ஒரு சூழ்ச்சி... இதில் பயனில்லை.. இதுல நல்ல படிச்சவனும், படிக்கதவனும் ஒன்னு தான்.. இதுக்கு போயி எவனும் தற்கொலை பண்ணிக்காதீங்க, ஒரு சொட்டு கண்ணீர் கூட வேண்டாம், மாறாக சிரிங்க, செத்துப்போன மெக்கலே காதுல விழுகுற மாதிரி சிரிங்க...

இவன்
நிரஞ்சன்

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

விஷமாகி போனதே!

 

இந்நாட்டில் உணவும், மருந்தும் விஷம் ஆகிவிட்டது... 
விஷமே உணவாகவும் மருந்தாகவும் இருக்கிறது.
பிறகு எப்படி இருக்கும் ஆரோக்கியம்..
வெள்ளையன் இதை விஷமாக்கி விட்டான்.  
முதலாளித்துவம் இதை விஷமாக்கி விட்டது. 
நம் அரசாங்கம் இதற்க்கு துணை  போகி விட்டது..

இவன்
நிரஞ்சன் 

சனி, 12 ஏப்ரல், 2014

தேர்தலும் தேர்வும் ஒரே நேரத்தில் வருவது சரியா?


தேர்தல் நேரத்தில் தேர்வு வைத்தால் மாணவர்கள் எப்படி தேர்தல் நிலையை உணர்வார்கள்?

எப்படி நல்ல அரசை அவர்களால் தீர்மானிக்க முடியும்?

தேர்வுக்கு படிக்காவிட்டாலும் தேர்வு பீதியில் இருப்பார்கள்.(இந்த நாட்டில் கல்வி என்பது பீதி அடையும் விஷயமாக தானே இருக்கிறது!!) அந்த பீதியில் இருக்கும்போது எப்படி அரசியலை சிந்திப்பார்கள்?....எப்படி நல்ல தலைமையை தீர்மானிப்பார்கள்?

அப்படி சிந்திக்க கூடாது என்பதற்காக தானே இப்படி தேர்வும் தேர்தலும் ஒரே நேரத்தில் வருகிறது... இந்த நாட்டில் தீவிர சிந்தனைக்கு பிறகா அரசியல் தீர்மானிக்க படுகிறது.....கோமாளி தனங்கள் விளம்பரம் ஆகி தானே ஆட்சி தீர்மானிக்க படுகிறது...... தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு விடுமுறை விடுவதனால் ஓட்டுரிமை உள்ள மாணவர்களால்  யார் ஆட்சிக்கு வரவேண்டும்  என்று முடிவெடுத்து விட முடியாது....

இப்படி நிலை இந்திய நாட்டில் இருப்பதனால் தான் பெரும்பகுதி மாணவர்கள் ( 97%) அரசியல் ஞானமே இல்லாமல் நாறிப்போய் இருக்கிறார்கள்...இப்படி மாணவர்களை வைத்து கொண்டு இந்தியா வல்லரசு ஆவது இளைஞர்கள் கையில் என்று சொன்னால் பற்றிக்கொண்டு வருகிறது.

 இவன்
நிரஞ்சன்  

சனி, 8 மார்ச், 2014

பாரதியும் நானும்

Photo: பாரதியும் நானும்

"தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி

தனியொரு பெண்ணுக்கு கற்பு பறிக்கப்பட்டால்
ஆண் சமுதாயத்தையே அழித்திடுவோம் என்கிறேன் நான்"

இன்று நாடு முழுக்க எவ்வளவு கற்பழிப்பு , அதன் பின் கொலை செய்துவிட்டு வேறு போகின்றான்.

எப்போது ஒரு ஆணுக்கு பெண் மீது அக்கறை இல்லாமல் போனதோ, இனி தேவை இல்லை ஆண் சமுதாயம்.

எப்போது ஒரு பெண்ணுக்கு ஆண் மீது அக்கறை இல்லாமல் போனதோ, இனி தேவை இல்லை பெண் சமுதாயம்.

உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
-இவன் நிரஞ்சன்

see my website:http://niranjansite.blogspot.in/
Must Share this


"தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி

தனியொரு பெண்ணுக்கு கற்பு பறிக்கப்பட்டால்
ஆண் சமுதாயத்தையே அழித்திடுவோம் என்கிறேன் நான்"

இன்று நாடு முழுக்க எவ்வளவு கற்பழிப்பு , அதன் பின் கொலை செய்துவிட்டு வேறு போகின்றான்.

எப்போது ஒரு ஆணுக்கு பெண் மீது அக்கறை இல்லாமல் போனதோ, இனி தேவை இல்லை ஆண் சமுதாயம்.

எப்போது ஒரு பெண்ணுக்கு ஆண் மீது அக்கறை இல்லாமல் போனதோ, இனி தேவை இல்லை பெண் சமுதாயம்.

உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
-இவன் நிரஞ்சன்

புதன், 5 மார்ச், 2014

இந்திய கல்விக்கு மிகவும் பொருந்தும் லெனின் கருத்து





கல்விக்கூடங்கள்
முதலாளித்துவ வகுப்பு மன நிலையில்
முழுமையாக ஆழ்த்தப்பட்டுவிட்டன.

முதலாளிக்கு
கீழ்படிந்த கை ஆட்களையும்
திறமையான தொழிலாளர்களையும்
வழங்குவது தான் அவற்றின் நோக்கம். 

வாழ்க்கையில் இருந்தும்
அரசியலில் இருந்தும்
பிரிக்கப்பட்ட கல்வி என்பது
பொய்யும் பாசங்கும் நிறைந்தது.
என்றார்
மாமேதை லெனின்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

காதலர் தினம்:இன்று என்னென்ன நடந்திருக்கும்!!!!

பலர் காதலை சொல்லி வெற்றி கண்டிருப்பார்கள்
பலர் தோல்வி அடைந்திருப்பார்கள்.
பலர் காதலை கூற தைரியமின்றி காதலை வெளிப்படுத்த முயற்சி மட்டும் செய்திருப்பார்கள்.
சிலர் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்களிடம் காதல் சொல்லிருப்பார்கள். பெண்களும் தான்.
பலர் காதல் தினத்தன்று தான் காதலை சொல்ல வேண்டுமா போங்கடா டேய்! என்று விலகி இருப்பார்கள்.
பலர் நண்பன் அல்லது தோழியின் காதலுக்கு உதவி செய்திருப்பார்கள்.
சிலர் தோல்வியால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்..
சிலர் தற்கொலை செய்து இறந்தும் போயிருக்கலாம்.
பலர் தற்கொலை செய்து கொள்வேன் என்று acting விட்டிருப்பார்கள்.
பலர் காதல் தோற்றதால் வருத்தம் இல்லாவிட்டாலும் வருத்தம் இருப்பது போல் சீன் காட்டுவார்கள்.
ரொம்ப பலர் சினிமா பார்த்துவிட்டு இந்த பொண்ணுங்களே இப்படி தான் மச்சி என்று நடிப்பார்கள் (ஹீரோ நு நினைப்பு) santhanam fans (loosu)
பலர் சரக்கடிக்க தொடங்கி இருப்பார்கள்...சரக்கு அடிக்கும்போதும் சினிமா டயலாக் பேசிக்கொண்டே நான் ஒரு சினிமா பைத்தியம் என்று நிருபித்துகொண்டெ இருப்பார்கள்.
சிலர் அம்மா அப்பா கிட்ட மாட்டிகொண்டு முழித்திருப்பர்கள்..
சில ஆண்கள் செருப்படி மிகவும் சில பெண்கள் அரச்சை வாங்கி இருப்பார்கள்.
காதலில் வெற்றி பெற்ற பலர் இன்னைக்கு ஏன் call பன்னல, ஏன் message பன்னல, ஏன் wish பன்னல, ஏன் வெளிய கொட்டிட்டு போகல, என்னோடு ஏன் time spent பன்னல, இப்படி பல மொக்க காரணங்களுக்காக சண்ட போட்டிருப்பார்கள்....
பலர் வெளிய சுத்தும்போது போலீஸ்காரனிடம் மாட்டிகொண்டு பணத்தை விரயம் செய்திருப்பார்கள்..
பலர் அடுத்தவர் காதலை கெடுத்திருப்பர்கள்...
சில காதலர்கள் சந்தோசமாக வெளிய சென்று வந்திருப்பார்கள். (இது கதிர்வேலன் காதல் படத்திற்கு போனவர்கள் தவிர)
ரொம்ப சிலர் இன்று காதலர் தினம் என்பதே தெரியாமல் இருந்திருப்பார்கள்...
உருப்படியான காதல் அனுபவம் மிக சொற்ப நபர்களுக்கே அரங்கேறியிருக்கும்.
எப்படி உலகில் நல்லவர்கள் மிக குறைவோ அதுபோல நல்ல காதலும் மிக மிக குறைவு....

பின் குறிப்பு :பெண்களின் நடவடிக்கை சில அசிங்கம இருக்குமே என்று தவிர்க்க பட்டுள்ளது... ஒன்னு ரெண்டு ஆண்கள் நடவடிக்கையும் கூட....


-இவன் நிரஞ்சன்

சனி, 8 பிப்ரவரி, 2014

புதிய முகம்- puthiya mugam(1993)

diection- suresh monon
starring- suresh menon, vineeth, revathi, nassar
music- a.r.rahmaan
cinemetography- muthu ganesh

புதிய முகம் மிக அருமையான படம்..வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம்.....திரைப்பட காதலர்களுக்கு மிகவும் பிடிக்கும்....ஆனால் இப்படம் வெற்றி பெற்றதா? பெற வில்லையா? என்பது எனக்கு தெரியவில்லை....ஏன் என்றால், நான் இப்படி ஒரு படம் இருப்பதையே கேள்வி பட்டதில்லை......ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த இரண்டாவது படம்...அதாவது, ரோஜா படத்திற்கு அடுத்து அவர் இசை அமைத்த படம்.
அதில் உள்ள பாடல்கள்:

kannukku mai azhagu

netru illatha maatram ennathu

இந்த பாடல்கள் மிக பிரபலம்....ஆனால் படம் பிரபலம் இல்லை....ஏன் என்று தெரியவில்லை.....ஆனால் படம்  பார்த்த பலர் இந்த படம் கண்டிப்பா பாருங்கள் என்று சொல்லி இருக்கின்றனர்...

விக்ரம் தர்மா சண்டை காட்சிகள் super

முத்து கணேஷ் ஒளிபதிவு  super

வசனங்கள் பலம்..

படத்திற்கு மிக பெரிய பலமே திரைகதை தான்..
எதிர்ப்பார்க்கமுடியாத....யூகிக்க முடியாத திரைகதை..

இது ஒரு குறிப்பிட தகுந்த படம்.....

must watch this movie

-இவன் நிரஞ்சன்